First Period : எந்த வயதில் பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி பேசலாம்.. அவர்களை எப்படி தயார் செய்ய வேண்டும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  First Period : எந்த வயதில் பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி பேசலாம்.. அவர்களை எப்படி தயார் செய்ய வேண்டும் பாருங்க!

First Period : எந்த வயதில் பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி பேசலாம்.. அவர்களை எப்படி தயார் செய்ய வேண்டும் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 06, 2024 06:48 PM IST

First Period : 8-14 வயது வரையிலான பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே இந்த வயதிற்கு முன்னரே அவர்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை கவனியுங்கள். மார்புக்கு அருகில் மாற்றம், சிலருக்கு பருக்கள், பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை படுதல், இரத்தப்போக்கு என மாதவிடாய் குறித்து விரிவாகச் சொல்ல வேண்டும்.

எந்த வயதில் பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி பேசலாம்.. அவர்களை எப்படி தயார் செய்ய வேண்டும் பாருங்க!
எந்த வயதில் பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி பேசலாம்.. அவர்களை எப்படி தயார் செய்ய வேண்டும் பாருங்க!

8 முதல் 14 வயது வரையிலான பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே இந்த வயதிற்கு முன்னரே அவர்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை கவனித்து மாதவிடாய் பற்றி கூற வேண்டும். மார்புக்கு அருகில் மாற்றம், சிலருக்கு பருக்கள், பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை படுதல், இரத்தப்போக்கு என மாதவிடாய் குறித்து விரிவாகச் சொல்ல வேண்டும்.

மாதவிடாய் பற்றி எப்படி சொல்வது?

சில குழந்தைகள் இந்த விஷயத்தைப் பற்றி கேட்க பயந்து முகம் சுளிக்கிறார்கள். எனவே அவர்களுடன் சுதந்திரமாக பேசுங்கள். உங்களுக்கு யோனி இரத்தப்போக்கு 3 நாட்கள் முதல் 6 அல்லது 7 நாட்கள் வரை நீடிக்கும் என்று சொல்லுங்கள். ரத்தத்தைக் கண்டு பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். இரண்டுமே நோயின் அறிகுறி அல்ல என்பதை விளக்குங்கள்.

துணிகளில் இரத்தம் ஒட்டாமல் அசௌகரியமாக உணராத வகையில் பேட்கள் அல்லது டம்போன்கள் மற்றும் கோப்பைகள் (மென்சுரல் கப்) பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும். நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் பெண் ஏதேனும் கேள்விகளைக் கேட்டால், எந்தப் பாசாங்கும் இல்லாமல் தெளிவாகவும் விரிவாகவும் பதிலளிக்க வேண்டும். நீங்கள் ஏதாவது அசட்டுத்தனமாகச் சொன்னால், அவர்களும் அப்படித்தான் நினைப்பார்கள். இதைப் பற்றி நீங்கள் பேச மறுத்தால் இனி ஒரு போதும் அவர்கள் உங்களுடன் அது குறித்து பேச மாட்டார்கள். அவர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. எனவே மாதவிடாய் ஒரு மோசமான விஷயம் அல்ல, உடல் மாற்றங்களின் செயல்முறை என்று சொல்லலாம்.

மேலும், சிலருக்கு முதல் மாதவிடாய்க்கு முன் தலைவலி, வயிற்று வலி மற்றும் மார்பக வலி போன்றவை ஏற்படலாம். கவனமாக இருக்கச் சொல்லுங்கள், இந்த அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று இதமாக சொல்லி புரிய வையுங்கள்.

பீரியட் கிட்:

உங்கள் பெண் முதல் மாதவிடாய் வரும்போது வீட்டிற்குள் இல்லாமல் பள்ளியில் அல்லது டியூஷனில் இருக்கலாம். எனவே அவளது பையில் ஒரு பீரியட் கிட்டை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று சானிட்டரி நாப்கின்கள், ஒரு புதிய பேண்டி, சேதமடைந்த பேன்டியை சேமிக்க ஒரு ஜிப் லாக் பேக் மற்றும் டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றைச் வைப்பது நல்லது. அது அவர்களை தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும்.

பேடுகளை பயன்படுத்தும் முறை

பலருக்கு சரியான புரிதல் இல்லாமல் பேண்டை பேண்ட்டிக்கு பதிலாக பெண்ணுறுப்பில் பேண்ட் எய்ட் போல் ஒட்டிக்கொள்கிறார்கள். சங்கடத்தை எதிர்கொள்ளும் அவர்களால் இந்த அசௌகரியத்தை யாரிடமும் சொல்ல முடியாது. எனவே உள்ளாடையில் பேடை ஒட்டி அதை எப்படி பயன்படுத்துவது என்று பாருங்கள். டாம்பூன்கள் என்றால், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் விளக்கி சொல்ல வேண்டும். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை பேடை மாற்றினால் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கலாம். மாதவிடாய் காலத்தில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பேடை மாற்றிய பின் கைகளை நன்றாக கழுவவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.