charcoal mask : முகத்தை பளபளப்பாகவும் பொலிவாக்கவும் உதவும் கரித்தூள் மாஸ்க்!
முகத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க கரித்தூள் பல நன்மைகளை வழங்குகிறது. அதை வைத்து மாஸ்க் தயாரிப்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளைச் சரி செய்ய இதை பயன்படுத்தலாம். முகப்பரு பிரச்சனை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது. பற்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கரித்தூள் முகத்திற்கு, சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.அதுக்குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கரித்தூள்- 1 டீஸ்பூன்
புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1
ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டீஸ்பூன்
அத்தியாவசிய எண்ணெய் - 1 சொட்டு
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும்.
இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்