Mushroom Benefits: இளமை துள்ளுவதற்கு இந்த காளான்களைச் சாப்பிடுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mushroom Benefits: இளமை துள்ளுவதற்கு இந்த காளான்களைச் சாப்பிடுங்கள்!

Mushroom Benefits: இளமை துள்ளுவதற்கு இந்த காளான்களைச் சாப்பிடுங்கள்!

I Jayachandran HT Tamil
Jan 15, 2023 10:23 PM IST

வயதான சருமத்தை மெருகூட்டி இளமையை மீட்டுத் தரும் காளான்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

இளமையை மீட்டுத் தரும் காளான்
இளமையை மீட்டுத் தரும் காளான்

எப்போதும் அழகாகவும் இளமையாகவும் இருக்க வேண்டுமா? காளான் சாப்பிடுங்கள். இளமை திரும்ப வரும். சில ஆய்வுகள் காளான்களை சாப்பிடுவது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களால் சருமத்தை புதுப்பிக்க உதவும் என்று நிரூபித்துள்ளது. முதுமை என்பது ஒரு இயற்கையான செயல்முறையாகும். ஒவ்வொரு வருடமும் நாம் முதுமையை அடைகிறோம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு இந்த வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும்.

எர்கோதியோனைன் மற்றும் குளுதாதயோன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஏராளமான தண்ணீர் ஆகியவை வயதான அறிகுறிகளைத் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சில வகையான காளான்களில் இதே போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருப்பதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள பென் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, காளானில் முதுமையைத் தடுக்கும் பண்புகளைக் கொண்ட எர்கோதியோனைன் மற்றும் குளுதாதயோன் கலவைகள் அதிகம் உள்ளன. எர்கோதியோனைன் கலவைகள் அந்த காளான்களை சமைப்பதன் மூலம் கூட பாதிக்கப்படுவதில்லை. அவை தீவிர வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டவை. இது போன்ற காளான்களை தினமும் சாப்பிட்டு வர வயதானதால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்த்து போராட முடியும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பல வகையான காளான்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை, அவற்றை அறியாமல் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். சில வகையான காளான்கள் மட்டுமே உண்ணக்கூடியவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வகைகளை சாப்பிடுவதால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் மொத்தம் 13 வகையான காளான்களை ஆய்வு செய்து, அதில் 2-3 வகைகளில் மட்டுமே முதுமையை தடுக்கும் சத்துக்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

போர்சினி வகை காளான்கள் வயதானதை தடுக்கும் சத்துக்களை தேர்வு செய்ய சிறந்தது என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறண்ட சருமம், சுருக்கங்கள், முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்னைகளை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் அவற்றில் உள்ளன. இந்த காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வானிலையின் தாக்கத்தால் சேதமடைந்த தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு நல்ல ஊட்டச்சத்தை வழங்குகின்றன, மேலும் இந்த போர்சினி காளான்கள் உள்ளே இருந்து ஈரப்பதத்தை வழங்குவதில் நிகரற்றவை.

ரீஷி மற்றும் சாகா காளான்கள் போன்ற வேறு சில வகையான காளான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வறண்ட சருமம், வறட்சியான சருமம் மற்றும் வயதான அறிகுறிகள் போன்ற பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் பீட்டா-குளுக்கன்கள், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் ரெய்ஷி காளான்களில் காணப்படும் சர்க்கரை மூலக்கூறுகள் உள்ளன. அவை தோல் சுருக்கங்களைத் தடுப்பதில் 'சூப்பர் பூஞ்சை' என வகைப்படுத்தப்படுகின்றன.

சாண்டரெல்ஸ் மற்றும் வெள்ளை பட்டன்கள் போன்ற காளான் வகைகள் ஏற்கனவே பல அழகு சாதனங்களில் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. சாண்டரெல்ஸ் காளான்களில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. அவை சருமத்தை சரிசெய்து, ஊட்டமளித்து, பாதுகாக்கின்றன. இந்த வகைகள் ஆரோக்கியமான தோல் மற்றும் முடிக்கு முக்கியமானவை. பட்டன் காளான் மிகவும் பரவலாகக் கிடைக்கும் வகை மற்றும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.