தினமும் இந்தப்பழத்தை ஒன்றாவது சாப்பிடவேண்டும்; காய்ச்சல் காணாமல் போகும்! வேறு நன்மைகள் என்ன?
தினமும் கொய்யாப் பழத்தை ஒன்றாவது சாப்பிடவேண்டும். காய்ச்சல் காணாமல் போகும். வேறு நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் நீங்கள் ஒரே ஒரு கொய்யாப்பழத்தை மட்டும் கட்டாயம் சாப்பிட்டுவிட வேண்டும். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் அவை என்னவென்று பாருங்கள். தினமும் ஒரு கொய்யா பழத்தை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொண்டால் நீங்கள் கட்டாயம் சாப்பிட்டு பலன்பெறுவீர்கள். கொய்யாப்பழம், அதன் இனிப்பு சுவைக்கு பெயர்போனது. இது மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். இதில் கலோரிகள் குறைவு. ஆனால் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். தினமும் ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும். இது செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கலைப் போக்குவது முதல் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். தினமும் நீங்கள் இந்த சுவையான பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
காய்ச்சலை எதிர்த்து போராட உதவும்
உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளைத் தான் சாப்பிடவேண்டும் என்று அல்ல, நீங்கள் இந்த கொய்யாப்பழத்தையும் அதற்கு பதில் எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் நேரத்தில் சாப்பிட, உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். காய்ச்சல் வைரஸ்களை விரட்டும் தன்மைகொண்டது.
ஆரோக்கியமான செரிமானம் மற்றும் வயிற்றுப்போக்கில் இருந்து விடுதலை
நீங்கள் உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணினால், கொய்யாப்பழம் சிறந்த தேர்வு. இந்த பழத்தில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் குடல் இயக்கத்தை நன்றாக பராமரிக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. கொய்யா இலைகள் வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவுகிறது.