Lemon Rasam: ஜீரண சக்தியை அதிகரிக்கும் எலுமிச்சை பழ ரசம் செய்வது எப்படி?
எலுமிச்சை பழ ரசத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
பொதுவாக சூடான ரசம் நல்ல புத்துணர்ச்சியை தருவதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். அந்த வகையில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் எலுமிச்சை பழ ரசத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் - 1
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
எண்ணெய், இஞ்சி, மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகு தூள் - சிறிதளவு
உப்பு, கடுகு, கொத்தமல்லி தழை, தண்ணீர், உப்பு - தேவையான அளவு
ரசப்பொடி, மல்லிப்பொடி - சிறிதளவு
செய்முறை
துவரம் பருப்பை நன்கு கழுவி சிறிதளவு தண்ணீரில் வேக வைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூளை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து, அதில் நன்கு வேக வைத்து மசித்த துவரம் பருப்பு, அரைத்த தக்காளி, ரசப்பொடி, மல்லிப்பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இந்த கலவை கொதித்ததும் மிளகு தூள், நறுக்கிய கொத்தமல்லி தழை போட்டு, எலுமிச்சை பழத்தை பிழியவும். எண்ணெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். இப்போது சுவையான எலுமிச்சை பழ ரசம் ரெடி. எலுமிச்சை ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். எலுமிச்சம் பழ ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும், தலை சுற்றல் நீங்கும். இந்த சுவையான மணமான ரசத்தை சுட சுட சாதத்தில் போட்டு அப்பளம் அல்லது வற்றல் சேர்த்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்