Masala Papadam: வீட்டில ஸ்னாக் இல்லையா.. கவலையே வேண்டாம் 10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா பப்படம்!
10 நிமிடத்தில் இதோ காரசாரமான மசாலா பப்படம் செய்து விடலாம். வாங்க எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
பொதுவாக வீட்டில் குழந்தைகள் எப்போதும் ஸ்னாக்ஸ் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி எதுவும் இல்லாத போதுதான் கண்டிப்பாக வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அப்படி நீங்கள் மாட்டிக்கொண்டால் 10 நிமிடத்தில் இதோ காரசாரமான மசாலா பப்படம் செய்து விடலாம். வாங்க எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பப்படம்
எண்ணெய்
கடுகு
உளுந்தம்பருப்பு
சீரகம்
கறிவேப்பிலை
வரமிளகாய்
வெங்காயம்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
பெருங்காயம்
செய்முறை
வீடுகளில் பயன்படுத்தப்படும் 20 பப்படத்தை வாங்கி தேவையான ஷேப்பில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கி எடுத்த பப்படத்தை சேர்த்து பொரித்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்தம்பருப்பு சேர்த்து பொரிய விட வேண்டும். அப்பளம் பொரிந்த பிறகு ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கலந்து விட வேண்டும்.
இரண்டு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து பொரிய விட வேண்டும். இந்த பொரித் பொருட்களுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்கயாத்தை சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கம் போது அதில் கால் ஸ்பூன் அளவு பெருங்காயத்தை சேர்த்து கலந்து விட வேண்டும். இதில் ஒரு பிஞ்ச் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் மிளகாய் தூளை சேர்த்து கலந்து விட வேண்டும். (காரம் குறைவாக எடுத்து கொள்பவர்கள் தேவை என்றால் மிளகாய் தூள் அளவை குறைத்து கொள்ளலாம்.) கடைசியாக பொரித்து எடுத்த பப்படத்தை சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் ருசியான மசாலா பப்படம் ரெடி
இந்த பப்படம் சூடான சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட ருசியாக இருக்கும். ஒரு டீயுடன் ஸ்னாக்ஸ் போல் சாப்பிட அட்டகாசமான காமினேஷன். மழைகாலத்தில் சூடான டீ காபியுடன் சாப்பிட்டு பாருங்கள் மக்களே.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்