Kadamba Sambar: வெள்ளிக்கிழமை சாம்பார் செய்றீங்களா.. இப்படி ஒரு முறை கதம்ப சாம்பார் செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadamba Sambar: வெள்ளிக்கிழமை சாம்பார் செய்றீங்களா.. இப்படி ஒரு முறை கதம்ப சாம்பார் செய்து பாருங்க!

Kadamba Sambar: வெள்ளிக்கிழமை சாம்பார் செய்றீங்களா.. இப்படி ஒரு முறை கதம்ப சாம்பார் செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 22, 2023 05:45 AM IST

உங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் கதம்ப சாம்பாரை இப்படி செய்து பாருங்க.

கதம்ப சாம்பார்
கதம்ப சாம்பார்

தேவையான பொருட்கள்

மல்லி விதை

கடலை பருப்பு

சீரகம்

வெந்தயம்

வரமிளகாய்

தேங்காய்

எண்ணெய்

நெய்

தக்காளி

கத்தரிக்காய்

மாங்காய்

முருங்கைகாய்

சுரைக்காய்

பூசணிக்காய்

சர்க்கரை பூசணிக்காய்

காரட்

அவரைக்காய்

புளி

உப்பு

கடுகு

உளுத்தம்பருப்பு

வெங்காயம்

பூண்டு

கறிவேப்பிலை

மல்லி இழை

துவரம்பருப்பு

புளி

செய்முறை

200 கிராம் அளவு துவரம் பருப்பை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு அதில் 3 ஸ்பூன் மல்லி விதை 5 வரமிளகாய் 2 ஸ்பூன் கடலை பருப்பு மிளகு கால் ஸ்பூன், கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் வெந்தயம், அரைக் கப் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மாங்காய், முருங்கைகாய், சுரைக்காய், பூசணிக்காய், சர்க்கரை பூசணிக்காய்

காரட், அவரைக்காய் என விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து காய்கள் நன்றாக வெந்த பிறகு ஒரு பெரிய லெமன் சைஸ் புளியை கரைத்து சேர்க்க வேண்டும்.

காய்கறி வெந்தபிறகு அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

கடைசியாக ஏற்கனவே வறுத்து வைத்த மசாலா பொருட்களை நன்றாக பொடி செய்து அதில் கலந்து விட வேண்டும். மசாலா பொருட்கள் சேர்த்த பிறகு ஒரு பத்து நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். கடைசியாக தேவையான அளவு மல்லி இலைகளை சேர்த்து சாம்பாரை இறக்கி விட வேண்டும். 

கடைசியாக தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் நெய் மற்றும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்த்து பொரியவிட வேண்டும் அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து 5 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இந்த தாளிப்பை சாம்பாரில் சேர்த்து உடனே மூடி விட வேண்டும்.

அவ்வளவு தான் மணக்க மணக்க கதம்ப சாம்பார் ரெடி. ருசி அட்டகாசமாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.