Honey gooseberry: தேன் நெல்லிக்காயில் சத்து இல்லையா? - என்னய்யா சொல்றீங்க? - விளக்கம் சொல்லும் டாக்டர்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Honey Gooseberry: தேன் நெல்லிக்காயில் சத்து இல்லையா? - என்னய்யா சொல்றீங்க? - விளக்கம் சொல்லும் டாக்டர்!

Honey gooseberry: தேன் நெல்லிக்காயில் சத்து இல்லையா? - என்னய்யா சொல்றீங்க? - விளக்கம் சொல்லும் டாக்டர்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 07, 2023 09:06 PM IST

தேன் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்பதை இங்கு பார்க்கலாம்.

தேன் நெல்லிக்காய்
தேன் நெல்லிக்காய்

மலை நெல்லிக்காயை எடுத்துக்கொண்டு அதனை ஒரு இட்லி பானையில் போட்டு 20 நிமிடம் நன்றாக வேகவைக்கிறார்கள். அது நன்றாக வெந்த பின்னர், நெல்லிக்காயை கீரி அதனை தேனில் போட்டு விடுகிறார்கள். அது நன்றாக ஊறும்!

அதனை 5 -ல் இருந்து 7 நாட்கள் வரை வெயிலில் நன்றாக காய வைப்பார்கள். இப்படித்தான் பாரம்பரிய முறையில் தேன் நெல்லிக்காயை செய்கிறார்கள்.

100 கி நெல்லிக்காயில் 450 மி.கி வைட்டமின் சி இருக்கிறது. இது தவிர, இதர வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களும் இருக்கின்றன. தேனில் 80 சதவீதம் குளுக்கோஸூம், சர்க்கரையும் இருக்கிறது.

நெல்லிக்காயை கொதிக்க வைக்கும் போதே 75 சதவீதம் வைட்டமின் சி போய்விடும். சூரிய ஒளியில் காய வைக்கும் போது வைட்டமின் சி அழிந்தே போய் விடும். 

ஆகையால் வைட்டமின் சி க்காக நீங்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுகிறீர்கள் என்றால், சாதரண நெல்லிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் பயன் கூட இதில் கிடைக்காது.

நன்றி: மருத்துவர் அருண் குமார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.