Diabetes: நீரிழிவு: ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் காய்கறிகள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க சாப்பிடவேண்டிய காய்கறிகள் குறித்துப் பார்க்கலாம்.
பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதை எளிதாக்குகிறது.
எவ்வாறாயினும், குளிர்காலம் மற்றும் வெயில்காலத்துக்கு இடைப்பட்ட காலம், நம்மை மந்தமாக்கலாம்.
இந்த காலகட்டத்தில், நொறுக்குத் தீனியை சாப்பிட மனம் ஏங்கும். இந்தப் பருவத்தில் நம்பமுடியாத சத்தான மண்ணுக்குக் கீழ் வளரும் காய்கறிகளும் அதிகம் கிடைக்கின்றன. அவை நுண்ணூட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இந்த காலத்தில் தங்கள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு விருப்பங்களைத் தேடும் நீரிழிவு நோயாளிகளுக்கு அவற்றில் சில சிறந்த காய்கறிகள் உள்ளன. எனவே, நீரிழிவு நோயாளிகள் உடலில் சர்க்கரையின் அளவு குறையும்போது சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகளை தங்கள் சமையலறையில் சேமித்து வைக்க வேண்டும். இதனால் அவர்கள் ரத்த சர்க்கரை அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
" இந்த காலம் பல்வேறு வகையான பருவகால உணவுகளை வழங்குகிறது. ஏனென்றால், நீங்கள் சாப்பிட பல சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் சாப்பிடுவதில் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது உங்களுக்கு அவசியம் "என்று உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆய்வாளரும், உணவு டார்ஜியின் இணை நிறுவனருமான டாக்டர் சித்தாந்த் பார்கவா கூறுகிறார்.
நாம் சாப்பிடவேண்டிய தரை காய்கறிகள்:
டாக்டர் பார்கவா பரிந்துரைத்த நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகள் பற்றியும்; இதனால் அவர்கள் ரத்த சர்க்கரை அளவு குறைவதைப் பற்றியும் காண்போம்.
1. டர்னிப்: குறைந்த கால அறுவடைக் காய்கறி, டர்னிப். இவை நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்தது. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், குடலின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்கும், கொழுப்பைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
2. பீட்ரூட்: நீரிழிவு நோயாளிக்கு ஒரு சூப்பர்ஃபுட் என்றால் அது பீட்ரூட்டை உட்கொள்வது தான். நரம்பு பாதிப்பு மற்றும் கண் பாதிப்பு போன்ற நீரிழிவு நோயின் சிக்கல்களைக் குறைக்க பீட்ரூட் உதவுகிறது. மேலும், பீட்ரூட்டில் காணப்படும் ஆல்பா-லிபோயிக் அமிலம் உயர் ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு நரம்பு சேதத்தை குறைக்க உதவுகிறது. மேலும், பீட்ரூட்டில் இருக்கும் பெட்டலைன் மற்றும் நியோ பெட்டானின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
3. கேரட்: உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் கேரட் உங்கள் ஆரோக்கியமான உணவில் ஒரு சிறந்த கூடுதலாகும். வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு கேரட் ஆகும். இவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால், கேரட் ரத்த சர்க்கரை அளவிற்கு பயனளிக்கும். ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் கேரட் நிரம்பியுள்ளது.
4. முள்ளங்கி: இதில் குளுக்கோசினோலேட் மற்றும் ஐசோதியோசயனேட் போன்ற ரசாயன கலவைகள் உள்ளன. அவை உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். முள்ளங்கியை உட்கொள்வது உங்கள் உடலின் இயற்கையான அடிபோனெக்டின் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது. இது இன்சுலின் எதிர்ப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஹார்மோன் ஆகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்