Potato Halwa: உருளைக்கிழங்கு வைத்து பொரியல் மட்டுமில்ல அல்வா கூட செய்யலாம்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Halwa: உருளைக்கிழங்கு வைத்து பொரியல் மட்டுமில்ல அல்வா கூட செய்யலாம்

Potato Halwa: உருளைக்கிழங்கு வைத்து பொரியல் மட்டுமில்ல அல்வா கூட செய்யலாம்

Aarthi V HT Tamil
Jul 15, 2023 01:15 PM IST

உருளைக்கிழங்கு அல்வா எப்படி செய்வது என பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு அல்வா
உருளைக்கிழங்கு அல்வா

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு - 2

சர்க்கரை - 4 ஸ்பூன்

திராட்சை - 10

பாதாம் - 4

நெய் - 1 தேக்கரண்டி

பால் - கால் கப்

முந்திரி - 5

ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி கையால் மெதுவாக கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடான பிறகு மசித்த உருளைக்கிழங்கை போட்டு, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் சமைக்கவும்.
  • இப்போது பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். மூடி போட்டு ஐந்து நிமிடம் சமைக்கவும்.
  • ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மற்றொரு அடுப்பில் பாதாம், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு ஹல்வா வேகும் போது நெய்யில் வறுத்த உலர் பழங்களை மேலே தூவவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கை அல்வா தயார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.