Deepavali Special Recipe : இனி தைரியமாக திகட்ட திகட்ட பலகாரம் சாப்பிடலாம்; இதோ தீபாவளி லேகியம் தயார்!
Deepavali Special Recipe : இனி தைரியமாக திகட்ட திகட்ட பலகாரம் சாப்பிடலாம். இதோ தீபாவளி லேகியம் தயார். செரிமானம் தீபாவளி காய்ச்சல் என அனைத்துக்கும் மருந்து.
தீபாவளிக்கு வீட்டில் பல்வேறு வகை பலகாரங்கள் நிறைந்து இருக்கும். அவை அனைத்தையும் சாப்பிட்டால் அவ்வளவுதான் வயிறு காலியாகிவிடும். ஆனால் அதற்கும் இயற்கை முறையில் லேகியம் கண்டுபிடித்து வைத்துள்ளார்கள். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் உங்கள் ஜீரணத்துக்கு உதவக்கூடியவை.
இவையனைத்துமே உணவாகவும், சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் மருந்தாகவும் பயன்படக்கூடியவை. இந்த லேகியத்தை சாப்பிட்டுவிட்டு தீபாவளி பலகாரங்களை நாம் சாப்பிட்டால் அவை நாம் சாப்பிடும் அனைத்து பலகாரங்களையும் செரிக்க வைத்துவிடும். எனவே இதை நீங்கள் தயார் செய்து வைத்துக்கொண்டால் தீபாவளிக்கு பலகாரங்களை தைரியமாக சாப்பிடலாம்.
தீபாவளி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்
சுக்கு – ஒரு துண்டு
சீரகம் – இரண்டரை டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
வர மல்லி – இரண்டரை டேபிள் ஸ்பூன்
ஓமம் – 25 கிராம்
கிராம் – 2
ஏலக்காய் – 2
சித்தரத்தை – 10 கிராம்
நெய் – 1 கப்
வெல்லம் – 100 கிராம்
(அரைத்த விழுதின் அளவுக்கு சமமாக வெல்லம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்)
செய்முறை
மேலே கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் நன்றாக சுத்தம் செய்து, காய வைத்து உரலில் சேர்த்து பொடியாக செய்துகொள்ள வேண்டும் அல்லது கவரில் சேர்த்து கூட தட்டி எடுத்துக்கொள்ளலாம்.
பின்னர் தண்ணீர் அளவாக விட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
ஊறவைத்தபொருட்களை அம்மியில் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை தெளித்து அம்மியில் வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அம்மியில் இல்லாவிட்டாலும் மிக்ஸியில் சேர்த்தும் அரைத்துக்கொள்ளலாம். நல்ல மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து குழம்பு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கனமான பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடிபிடித்துவிடாமல் இருக்க அடுப்பை குறைவான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
தண்ணீர் வற்றி கெட்டியாகத் துவங்கும். கெட்டியாகத் துவங்கும் முன், வெல்லத்தை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் நெய் சேர்த்து கிளறவேண்டும். நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். நன்றாக வற்றி வந்து சுண்டி லேகியமாகி வரும்.
இந்த லேகியத்தை தீபாவளிக்கு முதல் நாளே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தீபாவளியன்று திகட்ட திகட்ட பலகாரங்களை சாப்பிட முடியும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்