Deepavali Special : தென்னிந்தியாவில் எப்படியிருக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள்?
Deepavali Special : இந்தியாவில் பல காலமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை தீபாவளி. பல ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையோடு பல மத நம்பிக்கைகளும் இணைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இது பல வழிகளில் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பல காலமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை தீபாவளி. பல ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையோடு பல மத நம்பிக்கைகளும் இணைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இது பல வழிகளில் கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி களைகட்ட துவங்கிய நிலையல் தென்னிந்தியர்கள் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
தீபாவளி துலா மாதமான ஜப்பசியில் கொண்டாடப்படுகிறது. நரக சதுர்தசி திதியில் கொண்டாடடப்படுகிறது. இது அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது. நரக சதுர்தசி தீபாவளி கொண்டாட்டத்துக்கு முக்கியமான நாள். அடுப்பை சுத்தம் செய்து மெழுகி, அதில் கோலமிடப்படுகம்.
அதில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு, அந்த தண்ணீர் தீபாவளி நாளில் எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தப்படும். மக்கள் தங்கள் வீடுகளை கழுவி சுத்தம் செய்து கோலமிடுவார்கள். புதிய ஆடைகள் அணிவது மற்றும் பட்டாசு வெடிப்பது தீபாவளி கொண்டாட்டங்களுக் ஒன்று.
தீபாவளிக்கு உடுத்தும் புதிய ஆடைகள், பட்டாசுகள் ஆகிய அனைத்தும் பூஜை அறையில் எடுத்து வைக்கப்படும். தீபாவளியன்று சூரியன் உதிப்பதற்கு முன்னே எழுந்து எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். பின்னர் புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் சாப்பிட்டு, பிறருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள்.
தென்னிந்தியாவில் தீபாவளியன்று கடைபிடிக்கப்படும் மற்றொரு பழக்கம் தலை தீபாவளி என்பதாகும். புதுமணத்தம்பதிகள் கொண்டாடும் தீபாவளி தலை தீபாவளி. இந்த நாளில் மாப்பிள்ளை, பெண் வீட்டில் தீபாவளியை கொண்டாடுவார்.
ஆந்திரா
ஆந்திராவில் ஹரிகதா, இசையுடன் கூடிய இறைவன் ஹரியின் கதை சொல்லும் நிகழ்ச்சி பல இடங்களில் நடைபெறும். கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா நரகாசுரனை வதம் செய்த நாள் என்று நம்பப்படுகிறது.
சத்யபாமாவின் சிலைகளுக்கு அந்த நாளில் பூஜை செய்யப்படுகிறது. மற்ற கொண்டாட்டங்கள் அனைத்தும் மொத்த தென்னிந்தியாவிலும் ஒரே மாதிரி கொண்டாடப்படுகிறது.
கர்நாடகா
முதல் நாள் அஷ்விஜா கிருஷ்ணா சதுர்தசி, மக்கள் எண்ணெய் குளியல் செய்கின்றனர். நரகாசுரனை கொன்ற பின்னர் கிருஷ்ணர் தனது உடலில் உள்ள ரத்தக்கறையை போக்க எண்ணெய் குளியல் செய்ததாக கருதப்படுகிறது.
பாலி பத்யாமி தீபாவளி முடிந்து மூன்றாம் நாள், வண்ணமயமான ரங்கோலிகள் போடப்படுகின்றன. சாணத்தால் கோட்டை கட்டுகின்றனர். பாலி அரசன் குறித்து கதைகளும் இந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது. கர்நாடகாவில் தீபாவளியின்போது இவ்விரு நாட்களும் முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது.
டாபிக்ஸ்