Hyperpigmentation: பெண்களே கரும்புள்ளிகள் அதிகம் இருக்கா? கரும்புள்ளி குறித்த கட்டுக்கதைகளும் உண்மைகளும்!
கரும்புள்ளிகள் உள்ள சருமத்திற்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை என்பது கட்டுக்கதை
கரும்புள்ளிகள் (Hyperpigmentation) என்பது ஒரு பொதுவான பெரும்பாலானோருக்குத் தோலில் ஏற்படும் பிரச்சனையாக உள்ளது. இந்த நிலையில் முகத்தில் தோலின் கருமையான திட்டுகள் ஏற்படுகிறது. சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றங்கள், முகப்பரு தழும்புகள் மற்றும் சில மருந்துகள் என பல காரணங்களால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த கரும்புள்ளிகளை பற்றி நம்மை சுற்றி இருப்பவர்கள் பல கட்டுக்கதைகளை கூறுகின்றனர். அவற்றில் எது உண்மை என்று பார்க்க வேண்டியது அவசியம். பொதுவான கரும்புள்ளிகள் குறித்த கட்டுக்கதைகளை தவிர்த்து காரணங்கள், அதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. கட்டுக்கதை: கரும்புள்ளிகள் கருமையான சருமம் உள்ளவர்களை மட்டுமே பாதிக்கிறது
உண்மை: கருமையான தோல் நிறங்களைக் கொண்ட நபர்களில் ஹைப்பர் பிக்மென்டேஷன் மிகவும் கவனிக்கத்தக்கது என்பது உண்மைதான். ஆனால், இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பளபளப்பான சருமம் உள்ளவர்களும் கரும்புள்ளிக்கு ஆளாகிறார்கள், குறிப்பாக அதிக சூரிய ஒளியில் சென்றால் இது ஏற்படும் அபாயம் உள்ளது.
2. கட்டுக்கதை: கரும்புள்ளிகள் தானாகவே மறைந்துவிடும்
உண்மை: பொதுவாக கரும்புள்ளிகள் உரிய சிகிச்சை இல்லாமல் மறையாது. கரும்புள்ளிகளின் தீவிரம் மற்றும் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்து, சரியாக பல மாதங்கள் இல்லை ஆண்டுகள் கூட ஆகலாம். இருப்பினும், மேற்பூச்சு கிரீம்கள், மருந்துகள் மற்றும் லேசர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை துரிதமாக செய்வதன் மூலம் மறைய வாய்ப்பு உள்ளது.
3. கட்டுக்கதை: கரும்புள்ளிகள் உள்ள சருமத்திற்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை
உண்மை: அதிகமாக இருக்கும் கரும்புள்ளிகளை சரி செய்வதில் சன்ஸ்கிரீன் முக்கிய பங்குவகிக்கிறது. சூரியனில் இருந்து வெளியாகும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்கள் தற்போதுள்ள கரும்புள்ளிகளை மேலும் மோசமாக்கும். இதனால் தரமான சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துவது உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் மேலும் கருமையாவதைத் தடுக்கவும் உதவும்
4. கட்டுக்கதை: ஹைட்ரோகுவினோன் மட்டுமே கரும்புள்ளிகளுக்கு பயனுள்ள சிகிச்சையாகும்
உண்மை: ஹைட்ரோகுவினோன் என்பது சருமத்தை மிளிரச் செய்யும் க்ரீம்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், ஆனால் அது மட்டும் இல்லை. கோஜிக் அமிலம், அசெலிக் அமிலம், ரெட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற பிற பொருட்கள் கரும்புள்ளிகளை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளன. அதனால் உங்களுக்கு சிறந்த சிகிச்சை திட்டத்தை உருவாக்க உங்கள் தோல் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
5. கட்டுக்கதை: கரும்புள்ளிகளை தடுக்க முடியாது
உண்மை: கரும்புள்ளிகளை முழுவதுமாகத் தடுப்பது எப்போதும் சாத்தியமில்லைதான். ஆனால் உரிய தடுப்பு நடவடிக்கைகள், அதிக சூரிய ஒளியைத் தவிர்ப்பது, பாதுகாப்பான ஆடைகள் மற்றும் சன்ஸ்கிரீன் கிரீம்களை முறையாக பயன்படுத்த வேண்டும். மேலும் மென்மையான பிரகாசமாக்கும் சீரம்களின் பயன்படுத்துவது அதிக கரும்புள்ளிகள் வருவதை தடுக்க உதவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்