உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும் பழக்கங்கள்! இதை மட்டும் பின்பற்றுங்கள் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும் பழக்கங்கள்! இதை மட்டும் பின்பற்றுங்கள் போதும்!

உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும் பழக்கங்கள்! இதை மட்டும் பின்பற்றுங்கள் போதும்!

Suguna Devi P HT Tamil
Dec 11, 2024 10:24 PM IST

ஒவ்வொரு நாளும் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நமது தினசரி பழக்க வழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நாம் பின்பற்றும் இந்த பழக்க வழக்கங்களே நீண்ட கால ஆரோக்கியமான ஆயுளிற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும் பழக்கங்கள்! இதை மட்டும் பின்பற்றுங்கள் போதும்!
உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும் பழக்கங்கள்! இதை மட்டும் பின்பற்றுங்கள் போதும்! (Pixabay)

பிஸியான கால அட்டவணையில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகப்பெரியதாக தோன்றலாம். ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் நல்ல தேர்வுகள் மூலம், வேலை மற்றும் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்த முடியும். உடற்பயிற்சி, உணவு மற்றும் ஓய்வுக்கான நேரத்தை உள்ளடக்கிய தினசரி அட்டவணையை உருவாக்குவது உங்கள் நேரத்தை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் கடைசி நிமிட மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மனம் மற்றும் உடல் என இரண்டையும் சீராக்க உதவும் நடைமுறைகள் பின்வருமாறு.

தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர்

வேலை செய்யும் போது தண்ணீர் குடிக்க மறப்பது உங்கள் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் மேஜையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். ஃபோன் நினைவூட்டல்கள் அல்லது வாட்டர் டிராக்கிங் ஆப்ஸ் போன்ற சாதனங்களின் உதவியுடன் தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதை உறுதிசெய்யவும்.

 தூக்கத்தை தவிர்க்க கூடாது

தூக்கம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். தினமும் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்குங்கள். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரவு நேரத் தூக்கத்தை எதற்காகவும் இழக்காதீர்கள்.

சமச்சீர் உணவுமுறை

பிஸியான கால அட்டவணையின் மத்தியில் சமையலுக்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது பலருக்கு கடினமாக இருக்கும். ஆனால் ஊட்டச்சத்து விஷயத்தில், நீங்கள் தோல்வியடையக்கூடாது. உலர் பழங்கள், பருப்புகள், தயிர் மற்றும் பழங்கள் போன்ற சத்தான சிற்றுண்டிகளை வைத்திருப்பது ஆரோக்கியமற்ற தேர்வுகளை தவிர்க்க இது உதவி புரிகிரது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்று பலர் புகார் கூறுகின்றனர். ஆனால் அத்தகையவர்கள் 15-20 நிமிடங்களுக்கு அதிக தீவிர இடைவெளி உடற் பயிற்சிகளை தேர்வு செய்யலாம். படிக்கட்டுகளில் ஏறி, அலைபேசியில் பேசிக்கொண்டே நடப்பது உங்கள் உடற்தகுதிக்கு உதவும். இது கூட உங்கள் உடல்நிலையை சீராக்க உதவும். 

மன அழுத்தம்

பிஸியான வேலையின் போது மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. சுவாசப் பயிற்சிகள், தியானம் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைப் பயிற்சி செய்வது மன அழுத்தத்தை சமாளிக்க உதவும். மேலும் காலை மற்றும் மதியம் ஐந்து நிமிட இடைவெளியில் பயிற்சி செய்யலாம். வழிகாட்டப்பட்ட தியானப் பயன்பாடுகள் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், பிஸியான கால அட்டவணையில் கவனம் செலுத்தவும் உதவும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.