Corona Virus : டெல்லியை அச்சுறுத்தி வரும் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்! உங்களுக்கு தொற்று உள்ளதா எப்படி தெரிந்துகொள்ளலாம்?
Corona Virus : டெல்லியை அச்சுறுத்தி வரும் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்! உங்களுக்கு தொற்று உள்ளதா எப்படி தெரிந்துகொள்ளலாம்?
ஒருபுறம் டெல்லியில் பனிக்காலம் உச்சத்தில் உள்ளது. மற்றொருபுறம் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜேஎன் 1 வகை கொரோனா 24 பேருக்கு உள்ளது. இது சில வாரங்களிலேயே அதிகரித்துவந்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் கடைசியில்தான் இந்த வகை வைரஸ் டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் தடாலடியாக அதன் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.
தேசிய தலைநகரில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ள 24 பேரில் மூன்று பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜேஎன் 1 மிதமான அறிகுறிகளைக் கொண்டுள்ளது
ஜேஎன் 1 பாதித்த முதல் நபர் சில நாட்களிலேயே குணமடைந்துவிட்டார். மற்ற நோயாளிகளும் குணமடைந்துவிட்டனர். டெல்லி மாநிலத்தை சேராத கோவிட் பாதித்த 3 பேரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நோயாளிகள் வீட்டுத்தனிமையிலே குணமடைந்து வருகிறார்கள்.
குறைவான அறிகுறிகளுடன் 2 அல்லது 3 நாட்களிலே நோயாளிகள் தேறிவருகிறார்கள்.
கொரோனாவின் அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, தும்மல், தொண்டை கரகரப்பு, இருமல், மணமிழப்பு, வாந்தி, மூச்சுத்திணறல்.
ஜேஎன் 1ஐ தவிர டெல்லியில் பிஏ.2, எக்ஸ்பிபி.2.3, ஹெச்வி.1 மற்றும் ஹெச்கே.3 ஆகியவையும் உள்ளது. மரபணு சோதனைகளின் முடிவின்படி, இந்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹெச்வி.1 வகை வைரஸ்தான் அமெரிக்காவில் அதிகம் உள்ளது. ஜேஎன் 1ன்னுடன் இந்த வைரசும் அங்கு விரைவாக பரவிவருகிறது. ஹெச்வி 1 வகை வைரஸ் அமெரிக்காவில், கோடை காலத்தின் இறுதியில் பரவியது. இது இஜி.5லிருந்து வந்தது. அதைப்போலவே உள்ளது.
அக்டோபரில் ஹெச்வி.1 மற்ற வகைகளை முந்திக்கொண்டு சென்றது. அது இஜி.5, எக்ஸ்பிபி.1.16 ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. அந்த வைரஸையே, டிசம்பரில் ஜேஎன்.1 முந்திக்கொண்டு செல்கிறது.
2022ல் பிஏ.2 உச்சத்தில் இருந்தது. இது ஒமிக்ரானின் ஒரு வகை, 2022ன் துவக்கத்தில் பிஏ.2 உலகளவில் கவனம் பெற்றது. பிஏ.1ம் அண்மை வாரங்களில் அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்கே.3 இஜி.5ன் ஒரு வகை. ஹெச்கே.3 அல்லது எக்ஸ்பிபி.1.9.2.5.1.1.3 முதலில் தெற்கு ஆசியாவின் கண்டுபிடிக்கப்பட்டது.
டாபிக்ஸ்