தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coral Reef : மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளுக்கு ஆபத்து – அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!

Coral Reef : மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளுக்கு ஆபத்து – அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!

Priyadarshini R HT Tamil
Mar 07, 2024 07:00 AM IST

Coral Reef : மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளுக்கு ஆபத்து – அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!

Coral Reef : மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளுக்கு ஆபத்து – அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!
Coral Reef : மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளுக்கு ஆபத்து – அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!

ட்ரெண்டிங் செய்திகள்

ஏற்கனவே மத்திய அரசின் கடல்பாசி வளர்ப்புத் திட்டத்தின் காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் ஊடுறுவும் கடல்பாசியான காப்பாபைகஸ் அல்வாரெசி, பவளப்பறைகளை பெருமளவு பாதித்து அப்பகுதியில் மீன்வளம் குறைந்ததுள்ளது பேட்டர்சன் (சுகந்தி தேவதாசன் மீன்வளஆராய்ச்சிக் கழகம்) 2012ம் ஆண்டில் செய்த ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், மே,2019-மார்ச் 2021 இடைப்பட்ட காலத்தில், வாலைத்தீவில் ஊடுறுவும் காப்பாபைகஸ் அல்வாரெசி 9.1 சதவீதம் பவளப்பாறைகளையும், தலையாரித்தீவில் 3.9 சதவீதம் பவளப்பாறைகளையும் அழித்துள்ளது. சுகந்தி தேவதாசன் மீன்வள ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட ஜனவரி, 2023 ஆய்வுக் கட்டுரையில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அக்கட்டுரையில், பவளப்பாறைகளை நம்பியிருக்கும் மீன்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க ஊடுறுவும் பாசியின் அழிவிலிருந்து பவளப்பாறைகளை காக்க முயற்சிகளை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

2022, CAG அறிக்கையில், ஊடுறுவும் காப்பாபைகஸ் அல்வாரெசி கடல்பாசியின் அழிவிலிருந்து வெறும் 2 சதவீதம் பவளப்பாறைகளை மட்டுமே காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், அது போதாது என்றும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஊடுறுவும் கடல்பாசி, வளர்க்கத் தொடங்கிய இடத்திலிருந்து 45 கி.மீ. தொலைவு வரை முதலில் பரவியிருந்தது, 2023 மார்ச்சில் 60 கி.மீ. வரை பரவியிருந்தது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பவளப்பாறைகளின் தற்போதைய நிலை குறித்து தரவுகள் மற்றும் செய்திகள் இல்லை. பாதிப்பு மேலும் பரவியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழக அரசு தற்போதைய பவளப்பாறைகள் பாதிப்பு நிலவரத்தை வெளியிட முன்வருமா?

இந்நிலையில், அமெரிக்க NOAA (National Oceanic and Atmospheric Administration)-Coral Reef Watch அமைப்பு, இந்த கோடைக் காலத்தில் மன்னார் வளைகுடா பகுதியின் கடல்மேல் பரப்பு வெப்பம் (Sea Surface Temperature-SST), வழக்கத்தைவிட அதிகமாகி, பவளப்பாறைகளின் பாதிப்பிற்கும் (Coral Bleaching) அழிவிற்கும் காரணமாக அமைய முடியும் எனும் சிவப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

2016ல் கடல்வெப்ப உயர்வின் காரணமாக, மன்னார் வளைகுடா தேசியக் கடல் பூங்காவில் 16 சதவீதம் பவளப்பாறைகள் பெரும் பாதிப்பிற்கு (Coral Bleaching) ஆளானது.

அந்த கடல்பூங்காவில் 132 வகை பவளப்பாறைகள் இருப்பதும், உலகில் மிகச்சிறு இடங்களில் மட்டுமே அத்தகைய பல்லுயிர் பெருக்கம் இருப்பதும் கூடுதல் முக்கிய செய்திகள்.

உள்ளூர் வானிலை ஆராய்ச்சி மையங்கள் தமிழகத்தில் இந்தமுறை வெப்பம் வழக்கத்தை விட 2-3°C அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோட்டில் தற்போதே வெப்பம் 40°C க்கு அருகில் உள்ளது.

உலக வானிலை ஆராய்ச்சி மையங்களும், 2024 கோடை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், கடலின் மேல்பரப்பு வெப்பம் வழக்கமான 30°Cக்கு பதிலாக, 33°C ஐத் தாண்டும் எனக் கணித்துள்ளது.

இந்த உயர், கடல் மேல்பரப்பு வெப்பம் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் நாட்கள் இருந்தால், அது மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளின் பாதிப்பிற்கும், அழிவிற்கும் எளிதில் வித்திடும். (ராமேஸ்வரக் கடல் பகுதியில் மீன்வளம் குறைவு காரணமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை கைப்பற்றி பிடுங்கிக் கொள்வதும் வாடிக்கையான நிகழ்வாக மாறிவரும் சூழலில் தமிழக மீன்வளத்தை காப்பது மிக முக்கியம். காப்பாபைகஸ் அல்வாரெசி ஊடுறுவும் பாசியிலிருந்து பவளப்பாறைகளை காத்து மீன்வளத்தை பெருக்குவதும் ராமேஸ்வர கடல் மீனவர்களுக்கு நன்மை பயக்கும்)

இந்திய வானிலை ஆராய்ச்சி மையமும் இந்த கோடையில், கூடுதல் வெப்ப நாட்கள் (Heatwave Days) அதிகமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளைக் கண்காணித்து வரும் சுகந்தி தேவதாசன் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்க NOAA நிறுவன "2ம் எண் எச்சரிக்கை" குறித்து தெரியும் என்றும், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு 60 சதவீதம் எனவும் உறுதிசெய்துள்ளது.

உலக வானிலை எச்சரிக்கையின்படி, இந்திய மற்றும் தமிழக பவளப்பாறைகளின் அழிவை பொறுத்தமட்டில் லட்சத்தீவு, மன்னார் வளைகுடாபகுதிகளில் 2ம் எண் எச்சரிக்கையும், அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 1ம் எண் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

ஆனாலும் உள்ளூர் காற்று, மழைப்பொழிவு, புயல் சின்னங்களின் உருவாக்கம் போன்றவை கடல் மேல்பரப்பு வெப்பத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.

தமிழகத்தில் சமீபத்திய வானிலை உச்சிமாநாடு.2ல், சுகந்தி தேவதாசன் மீன்வள ஆராய்ச்சிக் கழகத்தின்,"Coral Reefs of the Gulf of Mannar: Decadal changes in the Status and Management Paradigms" அறிக்கையில், அப்பகுதியில் 2010-16ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உயிருடன் செழுமையாக உள்ள பவளப்பாறைகளின் பரப்பு 2005ல் 37 சதவீதத்தில் இருந்து, 2021ல் 27.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பறைகளை காக்க,

மீன் வளத்தைக் காக்க,

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க,

ராமேஸ்வர மீனவர்கள் மீன்வளம் குறைவு காரணமாக எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப் படுவதைத் தடுக்க,

தமிழக அரசு தக்க தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முன்வர வேண்டும்.

சமீபத்தில் கடல் பறவைகள் எங்கெல்லாம் அதிகம் இருக்கிறதோ, அங்கெல்லாம், அவற்றின் மலத்தின் வாயிலாக வெளியேறும் சத்துகளால் (Rich in Organic nutrients) பவளப்பாறைகள் செழிப்புடன் வளர்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

எனவே மன்னார் வளைகுடா பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பம் உயர்ந்து பவளப்பாறைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை குறைக்க தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே, பவளப்பாறைகளை, மீன்வளத்தை காப்பதோடு, பவளப்பாறைகள் கரியமிலவாயுவை அல்லது கார்பனை உள்வாங்கிக் கொள்வதால் புவிவெப்பமடைதல் பிரச்னையை குறைக்கவும் உதவும்.

மிகச் சமீபத்தில் வெளிவந்த ஆய்வில் பவளப்பாறைகளில் சிண்டினியேல்ஸ் (Syndiniales) எனும் கிருமி இருந்தால் வெப்ப அழுத்தத்தை (Heat Stress) அவை அதிகம் தாங்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

நன்றி – மருத்துவர். புகழேந்தி

WhatsApp channel

டாபிக்ஸ்