Cold Remedies at Home : தொண்டையில் கரகரப்பா? திறங்க உங்கள் வீட்டின் ஐந்தரை பெட்டியை!
Cold Remedies at Home : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை கரகரப்புக்கு வீட்டிலேயே கிடைக்கும் எளிய தீர்வுளை தெரிந்துகொள்ளுங்கள்.
மழைக்காலத்தில் தொண்டையில் கரகரப்பு ஏற்படுவது என்பது மிக சாதாரணமான ஒன்று. எனவே மழைக்காலம் துவங்க உள்ளதால் நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் அல்லவா அதற்காகத்தான் இந்த டிப்ஸ்கள்.
மழைக்காலம் நமக்கு வெயிலில் இருந்து கொஞ்சம் சூட்டை குறைக்க உதவுகிறது. மழைக்காலத்தில் தொண்டை கரகரப்பு, அலர்ஜி போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. தொண்டையில் சில நேரத்தில் எரிச்சல், வலி, விழுங்க முடியாமல் போவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இருமல், காய்ச்சல் போன்றவை கூட ஏற்படலாம்.
மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை கரகரப்புக்கு வைரஸ் தொற்றுகள் காரணமாகலாம். சளி, காய்ச்சல், ஹெச்1என்1, ஹெச்3என்2 ஆகியவை கூட காரணமாகலாம். ஸ்டெரப்டோகோகோல் பாக்டீரியாவும் தொண்டை கரகரப்புக்கு காரணமாகும். அலர்ஜியால் தொண்டை கரகரப்பு, எரிச்சல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொற்றுகள் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.
காற்றினால் பரவும் தொற்றுகளும், மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. வாயுத்தொல்லையும் மழைக்காலத்தில் மோசமடைந்துவிடும். எண்ணெயில் பொறித்த உணவு வகைகளை சாப்பிடுவது வாயுத்தொல்லை ஏற்படுத்தி, தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற தொற்றுகள் வளர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த தொற்றுகள் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.
சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
சுடுதண்ணீரில் தேன் கலந்து பருக வேணடும்.
நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீராவி பிடிக்க வேண்டும்.
சத்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தன் சுத்தத்தை பயன்படுத்த வேண்டும்.
மழையில் நனைவதை தவிர்க்க வேண்டும்.
அலர்ஜி ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால், மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.
துளசி, இஞ்சி, தேன் ஆகியவற்றை சேர்த்து செய்த தேனீர் பருகவேண்டும்.
டாபிக்ஸ்