Cloves Syndrome Awareness Day : திசுக்கள் அதிகமாகும் மரபணு கோளாறு நோய் விழிப்புணர்வு நாள், வரலாறு, முக்கியத்துவம்!
Cloves Syndrome Awareness Day : திசுக்கள் அதிகமாகும் அரிய மரபணு கோளாறு நோய் விழிப்புணர்வு நாள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் அரிதான மரபணு கோளாறு ஆகும். இந்நோய் பாதித்தவர்களுக்கு உடலில் உள்ள திசுக்கள் அபிரிமிதமாக வளரச்செய்யும். இந்நோய் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் மற்றும் இதனால் வாழ்க்கைத்தரம் என்னவாகும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அரிதான மரபணு கோளாறால் ஏற்படும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம் ஆகும். உலகம் முழுவதும் ஒன்றிணைந்து இந்நோய் பாதித்தவர்களுக்கு ஆதரவை வழங்குவது இந்த நாளில் செய்யக்கூடிய செயலாகும்.
க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?
க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் என்பது கான்ஜெனிட்டல் லிப்போமெட்டசின் அதிகப்படியாக வளர்வது, வாஸ்குலர் தவறாக வடிவமைந்துவிடுவது, எப்பிடெர்மல் நெவி, எலும்பு மண்டல குறைபாடு ஆகும். இது ஒரு வகை அரிய மரபணுக்கள் கோளாறு ஆகும்.
இதனால் கொழுப்பு திசுக்கள் வளரும், வாஸ்குலர் தவறாக வடிவமைக்கப்படும், சருமம் மற்றும் எலும்பு மண்டலத்தில் சில மாற்றங்கள் தோன்றும். இது உடலில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்தும்.
பிஐகெ3சி என்ற மரபணுக்கள் உருமாறுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. குழந்தை கருவில் தோன்றும்போதே இந்த உருமாற்றங்கள் தானாக நடக்கின்றன. உருமாற்றத்தின் அளவைப் பொறுத்து இவை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.
வரலாறு
அதிகப்படியான செல்களின் வளர்ச்சியால், க்ளோவ்ஸ் சிண்ட்ரோம், பல சிதைவுகளை உடலில் ஏற்படுத்துகிறது. இந்த அரிதான மரபணுக்கள் நோய், உடல் மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
எனவே 2010ம் ஆண்டு க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் குழுவினர், க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினத்தை ஏற்படுத்தினர். உலகம் முழுவதிலும் இந்த நாள், ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதன் நோக்கம், பிரச்சாரங்களை முன்னெடுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் சவால்களை சமாளிப்பது ஆகியவை ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உறுதுணையாக இருப்பது இந்நாளின் நோக்கமாகும்.
இந்நாளின் நோக்கம்
விழிப்புணர்வு
இந்த நோய் குறித்து ஆராய்ச்சிகளை அதிகரிப்பது. நோய் கண்டறிதல், சிகிச்சை தேர்வுகள், இந்நோய் பாதித்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது இந்த நாளின் நோக்கமாகும்.
முக்கியத்தும்
க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினம் இந்நோய் குறித்து விழிப்புணர்வை பல்வேறு வழிகளிலும் ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணுகிறது.
இந்த நாளில் கல்வி பயிற்சி பட்டறைகள் நடத்தி இந்த அரிய மரபணு நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
ஆன்லைனில் பிரச்சாரங்களை நடத்துவது, பொதுவிழிப்புணர்வை அதிகரிப்பது, முன்னதாகவே கண்டுபிடித்து சிகிச்சையளிக்க தேவையானவற்றைச் செய்வது,
இந்த நோய் குறித்த அச்சத்தை குறைத்து பாதிக்கப்பட்ட நோயாளிடம் அனுதாபம் கொள்வது,
பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவது,
இந்த நாள் குறித்த விழிப்புணர்வை ஊடகங்கள் வழியாக ஏற்படுத்துவது,
ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில் நவீன முறைகளை ஊக்கப்படுத்துவது என இந்த நாளில் செயல்கள் நடைபெறுகிறது.
சுவாரஸ்யமான உண்மைகள்
உலகம் முழுவதும் இந்நோய் பாதித்து 200 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த நோய்க்கு நீல வண்ணம் அடையாளம்
இந்த நாள் 2010ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த மரபணு கோளாறு பாதித்தவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகள்.
இன்னும் 5 ஆண்டுகளில் இந்த நோய்க்கான சரியான கண்டுபிடிக்கும் முறை கண்டுபிடிக்க்பபடும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி க்ளோவ்ஸ் சிண்ட்ரோம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது புரிதல் மற்றம் ஆதரவை அதிகரித்தல், ஆராய்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆதரவளித்தல் ஆகியவை இந்த நாளின் நோக்கமாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்