Tasty Cookies: சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் ரெசிபி
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Cookies: சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் ரெசிபி

Tasty Cookies: சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் ரெசிபி

I Jayachandran HT Tamil
Jun 10, 2023 11:22 PM IST

சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் ரெசிபி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ்
சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ்

சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் செய்யத் தேவையானவை:

- அரை கப் உப்பிட்ட வெண்ணெய், அறை வெப்பநிலைக்குக் கொண்டு வரப்பட்டது

- கால் கப் கேஸ்டர் சர்க்கரை

- அரை கப் லைட்/டார்க் பிரவுன் சுகர்

- 1 தேக்கரண்டி வெனிலா எக்ஸ்ட்ராக்ட்

- ஒன்றரை கப் மாவு

- முக்கால் தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

- 4 மேசைக்கரண்டி பால்

- முக்கால் கப் டார்க் சாக்லேட் சிப்ஸ்

- கால் கப் ஒயிட் சாக்லேட் சிப்ஸ்

- அரை கப் ப்ரெட்செல்கள், நறுக்கியது

சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் செய்முறை:

மைக்ரோ அவனை 180 டிகிரிக்கு சூடாக்கவும். ஒரு பேக்கிங் டிரேவில் பார்ச்மெண்ட் பேப்பரைப் பரப்பி வைக்கவும். இதை ஓரமாக வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில், வெண்ணெய் கிரீம் பதத்திற்கு மாறும் வரை நன்கு அடிக்கவும். அதில் கேஸ்டர் சர்க்கரை, பிரவுன் சுகர் ஆகியவற்றைச் சேர்த்து, மீண்டும் அடிக்கவும், அதன் நிறம் வெளிர் நிறத்திற்கு மாறும் வரை அடிக்கவும்.

வெனிலா எக்ஸ்ட்ராக்ட்டை அதில் சேர்த்து, மீண்டும் கலக்கவும்.

மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து, நன்கு பிசைந்து கலக்கவும், கெட்டியான மாவாக மாற்றிக் கொள்ளவும்.

கடைசியாக, இதில் சாக்லேட் சிப்ஸ் மற்றும் நறுக்கிய ப்ரெட்சல்களைக் கொட்டி பிசையவும்.

1 மேசைக்கரண்டி அளவு பந்துகளாகப் பிரித்துக் கொண்டு, ஏற்கனவே தயார் செய்து வைத்த பேக்கிங் டிரேவில் வைக்கவும். உங்கள் உள்ளங்கையால் லேசாக அழுத்தி விடவும். ஒவ்வொரு குக்கியின் மேலும் ஒரு ப்ரெட்செலை அழுத்தி வைக்கவும்.

10-12 நிமிடங்களுக்கு அல்லது ஓரங்கள் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். ஓவனில் இருந்து வெளியே எடுத்து, 5 நிமிடங்கள் ஒரு டிரேவில் குளிரச் செய்யவும், பிறகு குளிர்விக்கும் ரேக்கில் மாற்றிலும் முழுமையாக குளிரவிடவும். (ஓவனில் இருந்து எடுத்தவுடன் குக்கீகள் மிருதுவாக இருக்கும் என்பதால் கவனமாகக் கையாளவும். குளிர்ந்த பிறகே கடினமாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.