Cancer in Men : அலர்ட் ஆண்களே! உங்களை அட்டாக் செய்யும் கேன்சர்கள் இவைதான்!
- Cancer in Men : அலர்ட் ஆண்களே! உங்களை அட்டாக் செய்யும் கேன்சர்கள் இவைதான்!
- Cancer in Men : அலர்ட் ஆண்களே! உங்களை அட்டாக் செய்யும் கேன்சர்கள் இவைதான்!
(2 / 7)
ப்ராஸ்டேட் புற்றுநோய் - ஸ்பெர்ம்களை கடத்தும் ப்ராஸ்டேட் என்ற உறுப்பில் ஏற்படுகிறது. சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் அதிகமாக வெளியேறுவது, சிறுநீரில் ரத்தம், விந்தணுவில் ரத்தம், எலும்பு வலி, உடல் உடை குறைவு, ஆணுறுப்பு விரைத்தலில் குறைபாடு இந்த அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.
(3 / 7)
நுரையீரல் புற்றுநோய் - தொடர் இருமல், இருமும் போது ரத்தம் வருவது, மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, தொண்டை கட்டிக்கொள்வது, உடல் எடை திடீரென குறைவது, எலும்பு வலி மற்றும் தலைவலி ஆகிய இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும்.
(4 / 7)
பெருங்குடல் புற்றுநோய் - அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், தொடர்ந்து வயிறுப்பகுதியில் அசௌகர்யம், வலி, வாயித்தொல்லை போன்றவை இருந்தாலோ, வயிறு காலியான உணர்வு இல்லாவிட்டால், உடல் சோர்ந்து போவது, தீடீர் எடையிழப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.
(5 / 7)
சிறுநீர்ப்பை புற்றுநோய் - பெரும்பாலும் இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கலாம். சிறுநீரில் ரத்தம் வந்தாலோ, அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ, சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டாலோ, முதுகுவலி இருந்தாலோ உடனே மருத்துவரை அணுகவேண்டும். சிறுநீரின் நிறம் மாறிவருவது முக்கிய அறிகுறியாகும்.
(6 / 7)
மெலனோமா கேன்சர் - மெலனோமா புற்றுநோய் என்பது, சரும புற்றுநோய். மெலனோசைட்ஸ் என்பதில் இந்த புற்றுநோய் துவங்குகிறது. இது சருமத்துக்கு நிறத்தை வழங்கும் மெலனின் என்ற நிறமி. இது அதிகளவில் வெயிலில் சுற்றுவதால் ஏற்படுகிறது. கை, முதுகு, முகம் மற்றும் கால்களில் உள்ள சருமத்தில் ஏற்படுகிறது. ஏற்கனவே இருக்கும் மச்சத்தில் மாற்றம் ஏற்பட்டால், சருமத்தில் புதிதாக ஏதாவது வளர்ந்திருந்தால், உடலில் எந்த இடத்திலும் மச்சம் போன்ற அமைப்பு உருவாகும். அது மச்சம் போலன்றி ஒரு திட்டுபோல் இருந்தால் அது சருமப்புற்றுநோய்தான். இது உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தக்கூடியது.
மற்ற கேலரிக்கள்