Cabbage Dal: சாதத்திற்கு ருசியாக இருக்கும் முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cabbage Dal: சாதத்திற்கு ருசியாக இருக்கும் முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

Cabbage Dal: சாதத்திற்கு ருசியாக இருக்கும் முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

Aarthi V HT Tamil
Jul 21, 2023 02:53 PM IST

Cabbage Dal Recipe: முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு எப்படி செய்வது என பார்க்கலாம்.

 முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு
முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

முட்டைக்கோஸ்ல் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தனிமங்கள் அதிகமாக உள்ளது. வைட்டமின் சி, தியாமின், நியாசின் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. இதில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. இது பித்த அமிலங்களை பிணைப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் பொறியல் சாப்பிட விரும்பாதவர்கள், முட்டைக்கோஸ் பருப்பு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பாசி பருப்பு - 1/2 கப்

நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • பருப்பு மற்றும் நறுக்கிய முட்டைக்கோஸை ஒரு தடிமனான பாத்திரத்தில் எடுத்து நன்கு கழுவி வைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து பருப்பு, முட்டைகோஸ் இரண்டையும் சிறு தீயில் வேக வைக்கவும்.
  • இதற்கிடையில் தேங்காய் விழுதை தயார் செய்யவும். துருவிய தேங்காய், 4 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சீரகம், சிறிது உப்பு ஆகியவற்றை ஒரு ஜாரில் எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்டாக அரைக்கவும்.
  • பருப்பு மென்மையாக மாறும் வரை அரை மணி நேரம் வேக வைக்கவும். பருப்பை கரண்டியால் கலக்கிவிட்டு கொண்டே இருக்கவும். பருப்பு வெந்ததும் அதனுடன் தேங்காய் விழுதைச் சேர்த்து, சுவைக்குத் தேவையான உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் 5 முதல் 6 நிமிடங்களுக்கு இப்படி சமைக்கவும். பருப்பை சமைக்கும் போது கிளற வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். அவ்வளவு தான், அடுப்பை அணைக்கவும்.
  • சுவையான முட்டைக்கோஸ் பருப்பு தயார். சாதத்தில் சேர்த்து சூடாக சாப்பிடவும். இப்படிச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமும், சத்துக்களும் அதிகம் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் சிப்ஸ் வைத்து கூட சுவைக்கலாம். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.