Bread Upma : யம்மி அண்ட் டேஸ்டி! குழந்தைகள் விரும்பும் பிரட் உப்புமா! காய்கறிகளும், சத்துக்களும் நிறைந்தது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bread Upma : யம்மி அண்ட் டேஸ்டி! குழந்தைகள் விரும்பும் பிரட் உப்புமா! காய்கறிகளும், சத்துக்களும் நிறைந்தது!

Bread Upma : யம்மி அண்ட் டேஸ்டி! குழந்தைகள் விரும்பும் பிரட் உப்புமா! காய்கறிகளும், சத்துக்களும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Sep 06, 2023 06:00 PM IST

Bread Upma : குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி, பள்ளியில் இருந்து களைத்து வீடு வரும் குழந்தைகளுக்கு பிரட் உப்புமா கொடுத்தால் குதூகலிப்பார்கள். காய்கறிகளும் சத்துக்களும் நிறைந்த பிரட் உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்துகொளுங்கள்.

பிரட் உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்
பிரட் உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்

நெய் - 1 ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

இஞ்சி – 1 இன்ச்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கிது)

உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)

கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி

உங்களுக்கு பிடித்த பிரவுன் பிரட் அல்லது வெள்ளை நிற பிரட் என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

செய்முறை

முதலில் பிரட்டை இருபுறமும் நெய் தடவி, தோசைக்கல்லில் வாட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் என பொடியாக நறுக்கிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் சிறிது சிறிதா தண்ணீர் தெளித்து காய்கறிகள் நன்றாக வேகும் வரை, வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

காய்கறிகள் நன்றாக வதங்கி, தண்ணீரும் சுண்டியவுடன். ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை குட்டி,குட்டி சதுரங்களாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

நன்றாக கலந்துவிட்ட பின்னர் சிறிது நேரம் மூடி வைத்துவிடவேண்டும். சிறுது நேரம் கழித்து திறந்து பார்த்தால், யம்மி மற்றும் டேஸ்டியான பிரட் உப்புமா சாப்பிட தயாராக இருக்கும்.

பள்ளியில் இருந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இதை செய்துகொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதில் காய்கறிகளும் சேர்ப்பதால், இதன் சுவையும் நன்றாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.