Boy Baby Names : இவைதான் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பிரபலமான பெயர்கள்!-boy baby names these are the popular baby boy names in tamil nadu - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : இவைதான் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பிரபலமான பெயர்கள்!

Boy Baby Names : இவைதான் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பிரபலமான பெயர்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 24, 2024 05:12 PM IST

Boy Baby Names : இவைதான் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பிரபலமான பெயர்கள், இவற்றை வைத்து உங்கள் குழந்தைகளுக்கு அழகு பாருங்கள்.

Boy Baby Names : இவைதான் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பிரபலமான பெயர்கள்!
Boy Baby Names : இவைதான் தமிழ்நாட்டில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பிரபலமான பெயர்கள்!

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

அர்ஜுன்

அர்ஜுன் என்றால், பிரகாசம் மற்றும் மிளிர்கிற அல்லது ஜொலிக்கிற என்ற அர்த்தத்தை குறிக்கிறது. இந்தப்பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டும்போது, அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கும் என்பதை அது குறிக்கிறது. எனவே உங்கள் வீட்டு செல்ல மகனுக்கு இந்தப் பெயர்களை வைத்து மகிழச்செய்யுங்கள்.

கார்த்திக்

கார்த்திக் என்றால், இந்து மாதம், இறைவன் சிவனின் மகனின் பெயர். தமிழ்க்கடவுள் முருகனின் பெயர். இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

ஆதித்யா

ஆதித்யா என்றால் சூரியன், சூரியனைப்போல் பிரகாசிக்க கூடியவர் என்று பொருள். உங்கள் ஆண் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டுமெனில் அவர்களுக்கு இந்தப்பெயரை வைக்கலாம்.

ஹரி

ஹரி என்றால் இந்துக்கடவுள் விஷ்ணுவின் பெயர். இந்த பெயரை வைப்பவர்களுக்கு விஷ்ணுவின் அருள் கிட்டும்.

பிரணவ்

ஓம் என்ற மந்திரத்தின் பெயர். இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும்போது உங்களுக்கு நேர்மறை ஆற்றல் பொங்கிப்பெருகும். அதேபோல் இந்தப்பெயரை வைத்திரும் நபரிடம் எப்போதும் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

துருவ்

துருவ் என்றால், நட்சத்திரம் மற்றும் அசைக்க முடியாதவர் அல்லது நிரந்தரமானவர் என்று பொருள். இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கும்போது அவர்களின் வாழ்வு மேம்படுகிறது. அசைக்க முடியாத இடங்களில் அவர்கள் சென்று அமர்வார்கள்.

நிதின்

நிதின் என்றால் எப்போதும் மகிழ்ந்திருக்கக்கூடிய நபர் என்று பொருள். நிதின் என்ற பெயரை உங்கள் ஆண் குழந்தைக்கு வைக்கும்போது, அவர் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார். உங்கள் ஆண் குழந்தை மகிழ்வுடன் இருக்க அவருக்கு இந்த அழகிய பெயரை வைத்து மகிழுங்கள்.

ஆர்யன்

ஆர்யன் என்றால் மேன்மை பொருந்தியவர் மற்றும் போராளி என்று பொருள். உங்கள் குழந்தை நல்ல விஷயங்களுக்காக போராடும் நபராக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு இந்தப்பெயரை சூட்டி மகிழுங்கள். எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த போராளியாகவும், அறிவாளியாகவும் மாறுவார்.

ரோஹித்

ரோஹித் என்ற சிவப்பு வண்ணம் மற்றும் சூரியனின் முதல் கதிர் என்று பொருள். சூரியனிடம் இருந்து வரும் முதல் கதிர் எத்தனை இதமானதோ அத்தனை இதமானது அவர் உங்கள் வாழ்வில் வந்தது என்பதை குறிக்கிறது இந்தப் பெயர். இந்தப்பெயரை உங்கள் ஆண் குழந்தைக்கு வைத்து மகிழுங்கள்.

விஷ்ணு

விஷ்ணு என்றால் இந்துக்கடவுளின் பெயர். இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கும்போது வீட்டில் தெய்வீக அருள் குடிகொள்கிறது. எனவே இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெயர்களை உங்கள் வீட்டு ராஜாவுக்கு வைத்து மகிழுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.