Boy Baby Names : உங்கள் வீட்டு செல்ல மகனுக்கு ஏற்ற ‘ர’ வரிசை பெயர்களும்; அவற்றின் அர்த்தங்களும் இங்கே!-boy baby names r series names suitable for your pet son here are their meanings too - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : உங்கள் வீட்டு செல்ல மகனுக்கு ஏற்ற ‘ர’ வரிசை பெயர்களும்; அவற்றின் அர்த்தங்களும் இங்கே!

Boy Baby Names : உங்கள் வீட்டு செல்ல மகனுக்கு ஏற்ற ‘ர’ வரிசை பெயர்களும்; அவற்றின் அர்த்தங்களும் இங்கே!

Priyadarshini R HT Tamil
Aug 23, 2024 03:50 PM IST

Boy Baby Names : உங்கள் வீட்டு செல்ல மகனுக்கு ஏற்ற ‘ர’ வரிசை பெயர்களும்; அவற்றின் அர்த்தங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Boy Baby Names : உங்கள் வீட்டு செல்ல மகனுக்கு ஏற்ற ‘ர’ வரிசை பெயர்களும்; அவற்றின் அர்த்தங்களும் இங்கே!
Boy Baby Names : உங்கள் வீட்டு செல்ல மகனுக்கு ஏற்ற ‘ர’ வரிசை பெயர்களும்; அவற்றின் அர்த்தங்களும் இங்கே!

ஆண் குழந்தைகளின் பெயர்கள்

உங்கள் குழந்தைகளுக்கு ‘ர’ வரிசையில் பெயர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆண் குழந்தைகளுக்கு ‘ர’ என்ற வரிசையில் உள்ள இந்த பெயர்களை வைத்து அழகு பாருங்கள். ஒவ்வொரு பெயரும் அற்புத அர்த்தம் கொண்டதுதான். எனவே உங்கள் வீட்டு குழந்தைக்கு பொருத்தமாக இருக்கும்.

ரியான்

ரியான் என்றால், தலைமைப்பண்பு மற்றும் பலம் கொண்டவர் என்று பொருள். ஒரு ஆண் தலைமைப்பண்பும், புதிய பதவிகளை தேர்ந்தெடுக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை குறிக்கும்.

ரேவான்ஷ்

ரேவான்ஷ் என்றால், மிளிர்கிற என்று பொருள். நம்பிக்கை மற்றும் புதிய துவக்கம் என்பதை காட்டுகிறது. இந்த குழந்தை உங்கள் வீட்டுக்கு, ஒளியையும், இதத்தையும் கொண்டு வந்துள்ளது என்று பொருள். உங்கள் வாழ்வின் ஒளியானவர் என்று பொருள்.

ருத்வி

ருத்வி என்றால், சக்தி வாய்ந்தவர் என்று பொருள். இந்தப் பெயர் சிவனுடன் தொடர்புகொண்ட பெயராகும். இந்தப்பெயர் ஆன்மீகம், பலம் மற்றும் மாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

ருமான்

ருமான் என்றால், தனித்தன்மையான மற்றும் கவர்ச்சிகரமான என்று பொருள். இந்தப்பெயர் அதிகபட்சம் மற்றும் செல்வம் என்று பொருள். இஸ்லாமிய கலாச்சாரத்தில் இந்தப்பெயருக்கு மாதுளை என்று பொருள். பழங்களின் சொர்க்கம் என்று பொருள்.

ரியான்சூ

ரியான்சூ என்றால் நேர்மறை எண்ணம் மற்றும் சத்தியம் அல்லது வாக்குறுதி என்று பொருள். இது மகிழ்ச்சி மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. புதிய நாளைக் கொண்டுவருகிறது. இது பிரகாசமான மற்றும் துறுதுறு குழந்தை என்ற பொருளைத்தரும். புதிய நாள் தரும் மகிழ்ச்சியையும், ஆற்றலையும் கொண்ட பெயராகும்.

ரோமிக்

ரோமிக் என்பது மிகவும் நவீனமான பெயர். இது இனிமை மற்றும் கவர்ச்சிகரமான என்ற பொருளைத்தருகிறது. இது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவந்த ஆண் குழந்தை என்ற பொருளைத்தருகிறது. பார்த்தவுடனே தன் பக்கம் இழுக்கும் குழந்தைக்கு இந்தப்பெயரை வைக்கலாம்.

ருத்விஜ்

ருத்விஜ் என்றால், ஞானம் மற்றும் அறிவின் சுடர் என்று பொருள். இதற்கு ஆசிரியர் மற்றும் வழிகாட்டி என்று பொருள். ஒருவர் மற்றொருவருக்கு சரியான வழியை காட்டுபவர் என்ற பொருளைத்தரும்.

ரோஹித்தாஷ்வா

ரோஹித்தாஷ்வா என்றால், வரலாற்று சிறப்புமிக்க பெயர். இது மரியாதைக்குரியவர்களுக்கு வைக்கப்படும் பெயர் ஆகும். இதற்கு எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. அவை முக்கியமானது, நேர்மை, பலம் மற்றும் ரகசியம் ஆகியவற்றை குறிக்கிறது.

ரமிஷ்

ரமிஷ் என்றால், மரியாதை மற்றும் யதார்த்தமானவர் என்று பொருள். இந்த பெயரைக் கொண்ட ஆண் குழந்தைகள், மதிப்புமிக்கவர் மற்றும் கண்ணியமானவர் என்று பொருள். கருணை கொண்டவர் என்ற பொருளையும் தருகிறது.

ரவுல்

ரவுல் என்றால், எதையும் எளிதில் ஏற்கும் திறன் கொண்டவர் மற்றும் அதிக ஆற்றல் நிறைந்தவர் என்று பொருள். இது ஒரு குழந்தைக்கு ஏற்ற பெயர். எந்த சூழலிலும் நிலைத்து நிற்பது இந்தப்பெயர்.

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.