Boy Baby Names : மழைக் காலத்தில் பிறந்த மழலைக்கு, ‘மழையின் மகன்’ என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் இதோ!-boy baby names here are the names that mean son of the rain for boys born in the rainy season - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : மழைக் காலத்தில் பிறந்த மழலைக்கு, ‘மழையின் மகன்’ என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் இதோ!

Boy Baby Names : மழைக் காலத்தில் பிறந்த மழலைக்கு, ‘மழையின் மகன்’ என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் இதோ!

Priyadarshini R HT Tamil
Aug 12, 2024 01:34 PM IST

Boy Baby Names : மழைக் காலத்தில் பிறந்த மழலைக்கு, ‘மழையின் மகன்’ என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் இதோ, உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.

Boy Baby Names : மழைக் காலத்தில் பிறந்த மழலைக்கு, ‘மழையின் மகன்’ என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் இதோ!
Boy Baby Names : மழைக் காலத்தில் பிறந்த மழலைக்கு, ‘மழையின் மகன்’ என்ற அர்த்தத்தில் வரும் பெயர்கள் இதோ!

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.

மழைக்காலத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு மழையை மையப்படுத்தி வைக்கப்படும் மழைப்பெயர்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆண் குழந்தைகளின பெயர்கள்

மழைக்காலம் புதுமை, வளர்ச்சி மற்றும் உயிர்சக்தி ஆகியவற்றைக் கொண்டுவரும். பெற்றோர்கள் இந்த மழைக்காலத்தில் ஆண் குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்தால், அவர்களுக்கு இந்தப் பெயர்களை சூட்டி மகிழலாம். இவை மழையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பெயர்கள். இது அவர்களுக்கு நன்றாகவும் இருக்கும். இதோ மழையின் மகன்களுக்கான பெயர்கள்.

செனித்

செனித் என்றால், உயரம் அல்லது சிகரம் என்று பொருள். மகிழ்ச்சியின் உச்சியில் எப்போதும் இருப்பவர் என்பதை காட்டுகிறது. உங்கள் வீட்டுக்கு இந்த புதிய குழந்தை மகிழ்ச்சியின் உச்சத்தைக் கொண்டு வந்துள்ளது என்பது இதற்கு பொருள்.

ஹனீஷ்

ஹனீஷ் என்பது இந்தியை தோற்றமாகக் கொண்ட பெயர். இதற்கு அர்த்தம், புயலுக்கே முன்னெச்சரிக்கை கொடுப்பவர் என்று பொருள். எனவே மழைக்காலத்தின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை முன் உணர்த்துபவர் என்று பொருள்.

சர்யான்

சர்யான் என்பது அரபி மொழியை அடிப்படையாகக் கொண்ட பெயர். இதற்கு புயல் என்று பொருள். சக்தி வாய்ந்த, மாறும் வழக்கம் கொண்ட மழைக்கால மழையின் ஆற்றலைக்கொண்டவர் என்பது இதற்கு பொருள். இந்தப் பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்தால் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும்.

பார்ஷ்

பார்ஷ் என்பது இந்துக்களின் பெயர். பார்ஷ் என்றால் மழை என்று பொருள். இந்த பெயர் மழைக்காலத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

அனான்

இந்தப் பெயர் ஹீப்ரு மற்றும் அரபி ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு மழை மேகம் என்று பொருள். நீராவி என்ற அரத்தமும் உள்ளது. இது மழைக்கால வானம், கார் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் என்பதை குறிப்பிடுகிறது.

மெஹீல்

மெஹீல் என்றால், மழை அல்லது மழை மேகம் என்று பொருள். இது இந்தி மொழிப் பெயர். இது மழைக்காலத்ததின், புத்துணர்வூட்டும் மழைத்துளிகளைக் குறிக்கிறது.

வர்ஷால்

வர்ஷால், என்றால் மழை என்று பொருள். நேர்மையான குணங்கள் கொண்டவர். அழகானவர் என்ற அர்த்தம் கொண்டது. இந்தப்பெயர், நேரடியாக மழையை குறிக்கும் பெயர்.

அலிசே

அலிசே என்பது பராசீக மொழிப் பெயர். இதற்கு காற்று என்று பொருள். இது மழைக்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்று என்பதை குறிக்கிறது. இது மழையுடன் வரும் மனதை மயக்கும் இதமான காற்று ஆகும்.

அமிஹான்

அமிஹான் என்றால், வடகிழக்குப் பருவமழை என்று பொருள். இது அந்த மழைக்காலத்தின் ஆன்மாவைக் கொண்டுள்ளது. இது தனித்தன்மையான காலநிலை மாற்றங்களைக் கொண்டது என்ற மற்றொரு பெயரும் உண்டு. மழைக்காலத்தில் பிறக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பெயர்களை சூட்டி மகிழுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.