ப்ளூடூத் முதல் யுஎஸ்பி வரை: பட்ஜெட் பைக் ஸ்பெலண்டர்+ XTEC புதிய வசதிகள்
ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனம் பட்ஜெட் பைக் ஸ்பெலண்டரின் புதிய பதிப்பாக ஸ்பெலண்டர்+ XTEC என்ற இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்தது. இதில் வழக்கமாக ஸ்பெல்ன்டர் பைக்கில் இருப்பதை விட பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்திய சந்தையில் ஸ்பெலண்டர்+ XTEC மாடல் பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கியது ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனம். இதில் முக்கிய அப்டேட்டாக ஹீரோ நிறுவனம் கடைசியாக அறிமுகப்படுத்திய ப்ளெசர் XTEC ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களை ஸ்பெலண்டர்+ XTEC மாடலில் இணைத்துள்ளது.
லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் கூடிய அந்த புதிய அம்சங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ப்ளூடூத்: ப்ளூடுத் இணைப்புடன் கூடியு முழுவதுமாக டிஜிட்டலில் இயங்ககூடிய மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இவை பயனாளர்கள் எளிதில் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக செயல்பாடுகள் நிறைந்துள்ளன. அதன்படி போனில் வரும் அழைப்புகள், மிஸ்ட் கால் அலார்ட், புதிய மெசேஜ் அலார்ட் ஆகியவற்றோடு RTMI எனப்படும் நிகழ்நேர மைலேஜ் குறிகாட்டி மற்றும் எரிபொருள் அளவை காட்டும் குறிகாட்டி ஆகியவை இடம்பிடித்துள்ளன.
யுஎஸ்பி சார்ஜிங்: தற்போது ஸ்கூட்டர்களில் இந்த அம்சம் பொதுவானதாக மாறியுள்ளது. ஆனால் பைக்குகளை பொறுத்தவரை இது இல்லாமல் இருந்த நிலையில், பட்ஜெட் பைக்கான ஸ்பெலண்டர்+ XTEC -இல் உள்ளது
எல்இடி லைட்ஸ்: எல்இடி லைட்டுகள் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள பைக்குகள் HIPL எனப்படும் அதிக செறிவு நிலை விளக்குகள் இடம்பிடித்துள்ளன. புதுமையான எல்இடி ஸ்டிரிப்புகள் முன்பகுதியை மேம்படுத்தி காட்டுகிறது. இதைப் பார்க்கையில் ஒரு ஸ்பொர்ட்ஸ் பைக் தோற்றத்தை பெற்றதாக ஸ்பெலண்டர்+ XTEC மாடல் உள்ளது.
i3S தொழில்நுட்பம்: இந்த புதிய தொழில்நுட்பம் எஞ்சின் இயக்கம் மற்றும் நிறுத்தலை சீராக வைப்பதோடு எரிபொருள் செலவை குறைத்து ஆற்றல்மிக்கதாக பைக்குகள் செயல்பட உதவுகிறது.
பவர்டிரெயின்: ஸ்பெலண்டர்+ XTEC பைக்கின் இதயமாக 97.2சிசி பிஎஸ்-VI எஞ்சின், 7.9PS சக்தியுடன், 7, 000 ஆர்பிஎம் மற்றும் இயக்கு விசையாக 8.05 NM ஆக உள்ளது. டிரான்மிஷன் எனப்படும் கியர் மாற்றும் வசதி பழைய வண்டிகளை போல் 4 கியர்கள் இடம்பிடித்துள்ளன.