Arthritis Pain Remedy: ஆர்த்ரைடீஸ் மூட்டு வலியைக் குறைக்கும் எளிய வழிமுறைகள்
குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது இயல்பாகும். குறிப்பாக ஆர்த்ரைடீஸ் நோய் காரணமாக பொறுக்க முடியாத வலி தோன்றும். அதை எளிதாகக் குணப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதைப் பார்க்கலாம்.

ஆர்த்ரைடீஸை கீல்வாதம் என்றும் அழைப்பர். குளிர்காலம் கீல்வாதத்தை ஏற்படுத்தாது என்றாலும், குளிர்காலச் சூழ்நிலையால் ஏற்கெனவே கீல்வாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயுடன் தொடர்புடைய வலியை அதிகரிக்கச் செய்யும். மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கடினமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர் காலத்தில் மூட்டுவலி நோயாளிகளுக்கு மூட்டுகளைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் இறுக்கமாதல் போன்ற விஷயங்கள் சவாலாக மாறும்.
சில வாழ்க்கை முறை மாற்றங்களால் இவற்றை எளிதாக சமாளிக்க முடியும். சுறுசுறுப்பாக இருத்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், நல்ல தோரணையுடன் உட்கார்ந்து நிற்பது, கடினமான செயல்களைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும்.
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலம் ஏன் கடினமாக உள்ளது?