Tamil Nadu Picnic Places: குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tamil Nadu Picnic Places: குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள்!

Tamil Nadu Picnic Places: குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள்!

I Jayachandran HT Tamil
Jun 05, 2023 05:33 PM IST

பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள்
குடும்பத்துடன் பிக்னிக் செல்ல தமிழ்நாட்டில் இருக்கும் சிறந்த இடங்கள்

ஊட்டி-

ஊட்டியின் உதகமண்டலம் தமிழ்நாட்டின் மிகவும் வசீகரமான மலை வாசஸ்தலமாகும். இங்குள்ள மலைத்தொடர்கள், பசுமையான தோட்டங்கள் மற்றும் இதமான வானிலை ஆகியவை ஊட்டியை தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் இடமாக மாற்றுகிறது.

கொடைக்கானல்-

கொடைக்கானல் அதன் அசத்தலான அழகுக்காக 'மலைவாசஸ்தலங்களின் இளவரசி' என அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் தேனிலவு செல்ல ஏற்ற இடமாகவும் கொடைக்கானல் உள்ளது.

சென்னை-

மாநிலத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சிறந்த பிக்னிக் ஸ்பாட்களில் ஒன்றாகும். சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகும். இங்கு கோயில் தொடங்கி கடற்கரை, தீம் பார்க்க என சுற்றி பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.

ஏற்காடு-

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். நகரத்தின் சலசலப்பில் இருந்து விலகி இருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த இடம். 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அறியப்படும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன.

கன்னியாகுமரி-

இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சங்கமமாக விளங்கும் கன்னியாகுமரி, விடியற்காலை மற்றும் சாயங்காலத்தின் போது கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது.

மதுரை-

மதுரை தமிழ்நாட்டின் சிறந்த பிக்னிக் ஸ்பாட்களில் ஒன்றாக விளங்குகிறது. மதுரையில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலைத் தவிர, பல கோயில்களும் மற்ற இடங்களும் உள்ளன.

ஏலகிரி-

ஏலகிரி இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமாகும். இந்த மலைகளுக்குச் சென்று, இங்கு சாகசப் பயணம் மேற்கொள்ளும்போது அழகை ரசிக்கவும். ஏலகிரியின் சில முக்கிய சுற்றுலாத்தலங்கள் இங்கே உள்ளன.

ராமேஸ்வரம்-

ராமேஸ்வரம் தமிழ்நாட்டின் சிறந்த பிக்னிக் ஸ்பாட்களில் ஒன்றாகும், ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில், பாம்பன் பாலம் மற்றும் தனுஷ்கோடி ஆகியவை இந்த இடத்தின் முக்கிய இடங்களாகும்.

முதுமலை-

மலைவாசஸ்தலங்களுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற இடம் உள்ளது. தென்னிந்தியாவின் வனவிலங்கு சரணாலயங்களில் முதுமலையும் ஒன்று.

வேளாங்கண்ணி -

வேளாங்கண்ணி புனித தலமாக கருதப்படுகிறது. வேளாங்கண்ணி தேவாலயம், கடற்கரை ஆகியவை வேளாங்கண்ணியில் உள்ள சுற்றுலா தலங்களாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.