Benefits Of Wine: சருமத்தை பொலிவாக்குவதற்கு ஒயினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
சருமத்தை பொலிவாக்குவதற்கு ஒயினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஒயினை மிதமான அளவு குடிப்பதால் நன்மைகள் கிடைக்கும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அது இதயத்துக்கு நல்லது என்றும், ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை சீரமைக்கும் என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பளப்பளப்பான சருமத்தையும் தரும். இதுதவிர சரும நலனுக்கு ஒயினை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
ஒயின் ஃபேஷியல்
ஒயின் ஃபேஷியல், ராப், எக்ஸ்ஃபோலியண்ட், குளியல் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய அழகு சிகிச்சை முறை வந்துள்ளது. அதன் பெயர் ஒயினோதெரபி என்கிறார்கள். இவற்றில், ரெட், ஒயிட் அல்லது ரோஸ் ஒயின், மூலிகைகள், மற்ற எசன்ஷியல் ஆயில்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி சருமத்தை சீரமைத்து, முதுமைத் தடுப்பு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
கொஞ்சம் சயின்ஸ்
சிவப்பு திராட்சையின் விதைகள், தோல், இலைகள் ஆகியவற்றில், ஆண்டோசயனோசைட்ஸ், பாலிஃபீனால், பிரோசயனோடல்ஸ் போன்ற உட்பொருள்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின் ஈயைவிட அதிகமான ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்களும் உள்ளன. கொலாஜன், எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டமைப்பதன் மூலம் முதுமையை ஒயின் தடுப்பதாக கூறப்படுகிறது. இவை சுருக்கங்களை சரிசெய்து, தொங்கும் சருமத்தை மீட்டமைக்க உதவுகின்றன. சருமத்துக்கு இதமளித்து, இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.
உங்கள் தேர்வு என்ன?
ஒயின் ஃபேஷியல்: முகத்தை ஸ்டீமிங், கிளென்சிங் செய்த பிறகு, ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்களின் கலவை முகத்தில் பூசப்பட்டு மசாஜ் செய்யப்படும். சரும வகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் ஒயினும் மாறுபடும். மசாஜ் முடிவடைந்ததும், ஒயின் கவனமாக சுத்தம் செய்யப்பட்டு, அழகை நீடித்திருக்க செய்ய விசேஷ சீரம் ஒன்றினால் லாக் செய்யப்படும்.
ஒயின் ராப்: எசன்ஷியல் ஆயில்களைக் கொண்டு லேசான முழு உடல் மசாஜ். பின்னர், பழங்கள், சாக்லெட் கொண்ட் ஒயின் பேஸ்ட்டால் ராப் செய்யப்படும். சருமத்தில் பலன்கள் நீடித்திருக்க ஒரு சானா/ஸ்டீம் பாத், அதன் பின்னர் சாதாரண குளியல்.
ஒயின் ஸ்கிரப்: இது குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. ஒயின் தயாரிப்பின்போது மீதமான திராட்சை தோல்கள் ஸ்கிரப்பாக பயன்படுத்தப்படும், கூடுதல் பலன்களுக்கு கொஞ்சம் ஒயினும் சேர்க்கப்படும். ஸ்கிரப்பிங் முடிவடைந்தவுடன், சானா/ஸ்டீம் பாத், பின்னர் சாதாரண குளியல்.
ஒயின் பாத்: விலை அதிகம் (குளிக்கும் தண்ணீரில் ஒயினை கலப்பார்கள்). சருமத்துக்கும் உணர்வுகளுக்கும் இதமளிக்கும். ஒயினும், எசன்ஷியல் ஆயில்களும் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலக்கப்பட்டு, அந்த தண்ணீரில் நீங்கள் நீண்ட நேரம் ஊறுவீர்கள்.
டாபிக்ஸ்