Benefits Of Raddish: முள்ளங்கியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Raddish: முள்ளங்கியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Benefits Of Raddish: முள்ளங்கியை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

I Jayachandran HT Tamil
Apr 06, 2023 10:46 PM IST

முள்ளங்கியை சாப்பிட்டால் விளையும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

முள்ளங்கியின் நன்மைகள்
முள்ளங்கியின் நன்மைகள்

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் செரிமானம் மேம்படும்.

முள்ளங்கியை சாப்பிடுவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

முள்ளங்கிக்கு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் சிறுநீர்ப்பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

முள்ளங்கியில் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் பீபி கட்டுக்குள் இருக்கும்.

முள்ளங்கிக்கு சுருங்கிப்போன காற்றுக்குழாய்களை விரிவடையும் திறன் உள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்னைகள் தீரும்.

குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிட்டால் சளி மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

முள்ளங்கி இதயநோய்களைப் போக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

முள்ளங்கியில் வைட்டமின் ஏ,சி,ஈ, கே உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு முள்ளங்கி நல்ல பலனைத் தரும்.

முள்ளங்கி சாறை தினமும் அருந்திவந்தால் அதில் உள்ள வைட்டமின் சி சருமத்தைப் பொலிவாக்கும். முகப்பருக்கள், அரிப்புகளைத் தடுக்கும்.

முள்ளங்கி பேஸ்ட்டை முகத்தில் பூசினால் நல்ல கிளென்சராகப் பயன்படும். இறந்த செல்களை நீக்குகிறது.

முள்ளங்கியை சாம்பார், ஊறுகாய், பச்சடி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.