Home remedies: நொச்சி இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள்!
நொச்சி இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
நொச்சி இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
நொச்சி இலை உண்மையிலேயே பல அபூர்வமான மருத்துவக் குணங்களைக் கொண்ட மகத்தான மூலிகையாகும்.
சித்த மருத்துவத்தில் இதற்கு மிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்;
நொச்சி இலை காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாத விலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். நொச்சி பூ குளிர்ச்சி உண்டாக்கும்.