தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Care: கூந்தலைப் போஷாக்காக பராமரிக்கும் நெல்லிக்காய்!

Skin Care: கூந்தலைப் போஷாக்காக பராமரிக்கும் நெல்லிக்காய்!

I Jayachandran HT Tamil
Jun 18, 2023 09:35 PM IST

கூந்தலைப் போஷாக்காக பராமரிக்கும் நெல்லிக்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கூந்தலைப் போஷாக்காக பராமரிக்கும் நெல்லிக்காய்
கூந்தலைப் போஷாக்காக பராமரிக்கும் நெல்லிக்காய்

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்து கூந்தல் பிரச்னைகளுக்கும் தீர்வாக கூடிய நன்மைகளை நெல்லிக்காய் செய்யும். உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் இது.

நீங்கள் நன்கறிந்த நெல்லிக்கனி தான், உங்கள் கூந்தலுக்கு எண்ணற்ற விதங்களில் உதவி செய்யக்கூடியதாக இருக்கிறது. தலைமுடி உதிர்வதை தடுப்பது முதல் பொடுகை போக்குவது வரை பலவிதங்களில் நெல்லிக்காய் நன்மை செய்கிறது.

நெல்லிக்கனி ஹேர் டானிக்

உங்கள் மயிர்கால்களில் நெல்லிக்காய் சாறை பயன்படுத்துவது தலை முடியில் கொலாஜன் அளவை அதிகமாக்கி, தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையை ஐந்து நிமிடம் மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு கொண்டு மிதமான நீரில் அலசிக்கொள்ளவும்.

நெல்லிக்காய் யோகர்ட் மாஸ்க்

தலைமுடியை வலுவாக்கும் மாஸ்க்கான நெல்லிக்கனி- யோகர்ட் மாஸ்க் உங்கள் கூந்தலில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்தக்கூடியது, இரண்டு ஸ்பூன் நெல்லி பொடியை எடுத்துக்கொண்டு அதில் சூடான நீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இப்போது ஸ்பூன் தேன் அல்லது 2 ஸ்பூன் யோகர்ட் ஊற்றி நன்றாக கலந்து கூந்தலில் பூசிக்கொள்ளவும். 30 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்னர் இதமான நீரில் அலசவும்.

நெல்லிக்காய் எண்ணெய்

உங்கள் உச்சந்தலையை நெல்லிக்கனி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியை வலுவாக்கி, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். இதனால் உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மை பொடுகு, உச்சந்தலை அரிப்பை போக்குகிறது. இந்த நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தும் முன் சிறிது சூடாக்கி, வாரம் இரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளவும்.

நெல்லிக்காய் ஹேர் வாஷ்

இப்போது பெரும்பாலான பெண்களுக்கு இளநரை முடி தோன்றுவது சகஜமான பிரச்னையாக இருக்கிறது. தலைமுடி நரைப்பதை சீராக்கி, மங்கலான கூந்தலை பளபளக்க வைக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு இருக்கிறது. நெல்லிக்காய் துண்டு மற்றும் அதன் சாற்றை எடுத்துக்கொண்டு, தண்ணிர் கலந்து 30 நிமிடம் கொதிக்க வைக்கும். பின்னர் இந்த கலவையை குளிர வைத்து, அதில் உள்ள திடமான பொருட்களை நீக்கிவிட்டு, மிச்சமுள்ள கலவை கொண்டு கூந்தலை அலசவும்.

இந்த வழிகளைப் பின்பற்றினால் நீண்ட கருகருவென கூந்தல் வளர்ச்சி ஏற்படும்.

WhatsApp channel

டாபிக்ஸ்