Benefits of Kiwi : இந்த சின்ன பழத்தில் இத்தனை ரகசியங்கள் மறைந்துள்ளதா? கிவியின் கதை!
Benefits of Kiwi : கிவிப்பழம் அழகான பச்சை நிற சதையை கொண்ட, புளிப்பு சுவையுடைய ஒரு வித்யாசமான பழம். இது ஊட்டச்சத்துக்களின் கூடாரமாக உள்ளது. உணவில் அதிக நன்மைகள் கொடுக்கும் உணவுக்கு சூப்பர் ஃபுட் என்ற நற்பெயர் கொடுக்கப்படுகிறது. கிவியும் அதுபோன்ற ஒரு சூப்பர் ஃபுட்தான்.
கிவி பழத்தில் உள்ள பல்வேறு நன்மைகள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். அதில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பழம் கிவி. ஆரஞ்சு பழத்தைவிட இந்தப்பழத்தில் அதிகம் வைட்டமின் சி சத்து உள்ளது. அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிவியை அன்றாடம் எடுத்துக்கொள்வது உங்கள் உடலின் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. உங்களுக்கு தொற்றுகள், காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.
இதயத்துக்கு இதமானது
கிவி இதய ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளிலும் காக்கிறது. கிவி உட்கொள்வது ரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், ரத்த அடைப்பை தடுக்கிறது. இவையனைத்தும் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
ஜீரணத்துக்கு சிறந்தது
கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்துதான் உணவு செரிக்க உதவுகிறது. வயிற்றுப்பகுதிக்க தேவையான நன்மைகளை கிவியில் உள்ள நார்ச்ச்த்து செய்துவிடுகிறது. மலச்சிக்கலை தடுத்து, ஒட்டுமொத்த ஜீரணத்துக்கும் வழிவகுக்கிறது. ஜீரண மண்டலத்தையும் காக்கிறது. கூடுதலாக இது வயிற்றுப்பகுதியில் நல்ல உயிரினங்களை வளர்க்க உதவுகிறது. வயிற்றுப்பகுதியில் உள்ள நல்ல உயிரினங்கள்தான், நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சி ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
அழற்சியை தடுக்கிறது
நீண்ட நாள் வியாதிகளுக்கு அழற்சி காரணமாகிறது. அதில் இதய நோய்கள், கேன்சர், ஆட்டோ இம்யூன் நோய்கள் ஆகிய அனைத்துக்கும் அழற்சியே காரணமாகிறது. கிவியில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெரோட்டனாய்ட்ஸ் மற்றும் ஃப்ளேவனாய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அது அழற்சியை குறைக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு அழற்சியே காரணமாகிறது. அதை தடுக்க உதவுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு
வைட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட கிவியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள், புற்றுநோய் தடுப்புக்கு உதவுகின்றன. மிக முன்கூட்டியே கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் கிவி நோய் செல்கள் வளராமல் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சுவாச மண்டல ஆரோக்கியம்
கிவியில் அதிகம் உள்ள வைட்டமின் சி சுவாச மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது. ஆஸ்துமா போன்ற மூச்சுப்பிரச்னைகளை கூட கிவி சாப்பிடுவதால் தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுவாச பாதையில் எற்படும் அழற்சிகளை நீக்கி, நுரையீரல் இயங்குவதற்கு உதவுகிறது.
எடை மேலாண்மை
கிவியில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள், எடை மேலாண்மைக்கு உதவுகிறது. எனவே உடல் எடை குறைப்பில் அதிக அக்கறை செலுத்துபவர்கள் கிவி பழத்தை எடுத்துக்கொள்ளவது நல்லது. இதில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது. உடல் எடை குறைப்புக்கு உதவி, உடல் எடை பராமரிக்க உதவுகிறது.
பார்வை மற்றும் சருமத்துக்கு உதவுகிறது
கிவியில் உள்ள வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கண் பார்வை மற்றும் வயோதிகம் காரணமாக ஏற்படும் கண் நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. வைட்டமின் இ மற்றும் சி, சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. செல்கள் சேதம் அடைவதை தடுத்து, கொலோஜென் உற்பத்திக்கு உதவுகிறது. அது நீங்கள் எப்போதும் இளமையுடன் தோற்றமளிக்க உதவுகிறது.
கிவியை நீங்கள் பழமாக அப்படியே கடித்து சாப்பிடலாம் அல்லது பழ சாலடில் கலந்து சாப்பிடலாம். ஜாம் செய்தும் சாப்பிடலாம். ஸ்மூத்திகளிலும் சேர்த்து சாப்பிடலாம். உங்களுக்கு பிடித்ததுபோல் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்