கெளுத்தி மீனின் மருத்துவ பயன்கள் என்ன?
ஆற்றில் வாழும் கெளுத்தி மீனின் மருத்துவ பயன்கள் என்ன என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவை யெனில் கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
கெளுத்தி மீனின் மருத்துவ பயன்கள்
குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.
அடங்கியுள்ள சத்துக்கள் :
100 கிராம் கெளுத்தி மீனில், சாச்சுரேட்டு கொழுப்பு 3.3 கிராம், பாலி அன்சாச்சுரேட்டடு கொழுப்பு 3.3 கிராம், மோனோசாச்சுரேட்டடு கொழுப்பு 6 கிராம் அடங்கியுள்ளன.
மேலும், சோடியம் – 71 மிகி, பொட்டாசியம் – 340 மிகி,
கார்போ ஹைட்ரேட்- 8 கி, விட்டமின் A, C, கால்சியம் 4 சதவீதம், விட்டமின் D – 10 சதவீதம், விட்டமின் B12 – 6 சதவீதம் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள் :
6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம்.
பெண்கள் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்,
அது போன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
எனவே, கலோரி குறைவாக உளள கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது,
இந்த இரு சத்துக்களும் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்து கிறது.
அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போ ஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.
நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக விட்டமி B12 தேவை, அப்படி விட்டமின் B12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால்,
உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, எனவே விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள்.