இன்சுலின் செடியின் மருத்துவ குணங்கள் தெரியுமா?
இன்சுலின் செடியின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
நாட்டு புறங்களில் மிகவும் இயல்பாக இன்சுலின் செடி கிடைக்கிறது. இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும்.
நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. மாதவிடாயை முறைப் படுத்துகிறது.
கருப்பை நீர் கட்டிகளையும் இந்த கஷாயம் குணப்படுத்துகிறது.
மேலை நாடுகளில் இந்த இன்சுலின் செடியிலிருந்து கிடைக்கும் உட்பொருள்களில் இருந்து கிடைக்கும் சிலவற்றை மூலப்பொருளாகக் கொண்டு நீரிழிவு நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப் படுகிறது.
இந்த இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை நாம் சர்க்கரை நோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.
இதை முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ஆம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்த்து இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள்.
ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இதை விட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
ஊசி மட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது.
உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும் போது அதற்கு இந்த இன்சுலின் இலை மருந்தாக அமைகிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை உடல் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிக்கும் இயல்பு கொண்டது.
முதலில் கண்களை பாதிக்கும். பின்னர் நரம்புகளை பாதிக்கும். எனவே சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது என்பது ஆராய்ச்சி யாளர்களின் கருத்து.
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்ற இந்த இன்சுலின் இலைகளில் நம்முடைய குடலில் வாழுகின்ற நல்ல பாக்டீரியாவான ஈகோலின் அதிக அளவு இருக்கிறது.
இதில் புரோ-பயோடிக் அதிகமாக இருப்பதால், ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதிலுள்ள நல்ல பாக்டீரியாவும் ப்ரக்டோசும் குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
இந்த இன்சுலின் செடியில் உள்ள சோடியம் நம்முடைய உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருப்பதோடு இதிலுள்ள ரைசோம் சிறுநீரகத்தை ஆரோக்கிய வைத்திருக்க உதவுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.