Benefits of Cumin Seeds: சீரகத்தின் சிறப்புகள்…
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Cumin Seeds: சீரகத்தின் சிறப்புகள்…

Benefits of Cumin Seeds: சீரகத்தின் சிறப்புகள்…

Priyadarshini R HT Tamil
Feb 24, 2023 04:30 PM IST

நாம் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தக்கூடிய சீரகத்தின் சிறப்புகள் மற்றும் அதில் உள்ள சத்துகள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ரத்த அழுத்தம் இருப்பவர்கள், சிறுநீரகத்தில் கோளாறு உள்ளவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்ததை சீராக வைத்துக்கொள்ள உதவும், சிறுநீரை கழிக்கும்போது சிறுநீரத்தில் உள்ள கழிவுகள் மற்றும் தொற்றுகளை போக்க உதவும். 

சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் கால் ஸ்பூன் அளவு சாப்பிட அஜீரண கோளாறுகள் தீர்வதுடன் வாய் மணக்கும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.

சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது இளமையை தக்கவைக்க உதவும். சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும். மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்து உதவும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும். 

சீரக கஷாயம்: 

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் அதை உலை கொதிநீரில் போட்டு பனங்கற்கண்டு, வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வரும்போது கர்ப்ப கால மலச்சிக்கலை அது போக்க உதவும். 

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச்சாப்பிட நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் பாதி சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள் வயிற்று கோளாறு குணமாகும். இதுவே சீரகத்தின் பலன்கள் ஆகும். இவ்வளவு சிறப்புகள் உள்ள சீரகத்தை உணவில் சேர்த்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.