Herbal medicine: நீரிழிவு, வயிற்றுப்புழு, மஞ்சள்காமாலையை போக்கும் அதலக்காய் மருத்துவ பயன்கள்
நீரிழிவு, வயிற்றுப்புழு, மஞ்சள்காமாலையை போக்கும் அதலக்காயின் பிற மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
அதலக்காய் மருத்துவ பயன்கள்
தென் தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் புகழ்பெற்ற காய்களில் ஒன்று ‘அதலைக்காய்’. பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்த இக்காய், பேச்சுவழக்கில் ‘அதலக்காய்’ என்று அழைக்கப்படுகிறது. கோவைக்காய்போலக் கண்மாய்க் கரைகள், வேலியோரங்கள் போன்றவற்றில் வளரும் கொடி வகை இது.
கார்த்திகை மறறும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.
இன்றைய சூழலில் நிறைய பேர் பாதிக்கப்படும் பிரச்னைகளில் ஒன்று நீரிழிவு நோய். நீரிழிவு நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது.