தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefit Of Coconut Water For Hair

coconut water for hair: நீளமான அடர்த்தியான கருகரு கூந்தல் தரும் தேங்காய் தண்ணீர்

I Jayachandran HT Tamil
Jun 01, 2023 06:35 PM IST

நீளமான அடர்த்தியான கருகரு கூந்தல் தரும் தேங்காய் தண்ணீர் பயன்படுத்தும் முறைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

அடர்த்தியான கருகரு கூந்தல் தரும் தேங்காய் தண்ணீர்
அடர்த்தியான கருகரு கூந்தல் தரும் தேங்காய் தண்ணீர்

ட்ரெண்டிங் செய்திகள்

தேங்காய் தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இது அழகுக்கும் பல நன்மைகளை தருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உலர்ந்த, பலவீனமான மற்றும் உயிரற்ற கூந்தல் பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை குடிப்பதுடன் அதை உங்கள கூந்தல் பராமரிப்பு வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள். தேங்காய் தண்ணீரை குடிக்கும் பொழுது அதன் விளைவுகளை காண சிறிது நேரம் ஆகலாம். ஆனால் அதை உங்கள் தலைமுடியில் நேரடியாக பயன்படுத்தும் பொழுது உங்களால் உடனடி மாற்றத்தை உணர முடியும்.

தேங்காய் தண்ணீரில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் மற்றும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உங்கள் தலை முடியை நீரேற்றமாக வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி முடி சார்ந்த பல பிரச்னைகளுக்கு ஒரு இயற்கை தீர்வாக அமைகிறது. எனவே தேங்காய் தண்ணீரை தலைமுடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் தண்ணீர் ஹேர் ஸ்ப்ரே

வறண்ட மற்றும் அடங்க மறுக்கும் கூந்தலால் அவதிப்படுகிறீர்களா? தேங்காய் தண்ணீரை கொண்டு ஹேர் ஸ்ப்ரே செய்து தலைமுடிக்கு பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்-

தேங்காய் தண்ணீர்- 1/4 கப்

கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்

ஜோஜோபா எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை-

முதலில் ஒரு பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தலாம். உங்கள் முடி பொலிவு இழந்து வறட்சியாக காணப்பட்டால் இந்த ஹேர் ஸ்ப்ரேவை பயன்படுத்தலாம்.

இந்த கலவையை மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்குப் பிறகு நீங்கள் மீண்டும் ஒரு முறை ஃபிரெஷ் ஆக ஹேர் ஸ்பிரே செய்து கொள்ளலாம்.

ஷாம்புவில் சேர்க்கலாம்

இந்த வகையில் தேங்காய் தண்ணீரை உங்கள் கூந்தல் பராமரிப்பு வழக்கத்தில் எளிதாக சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் தண்ணீர் 3-4 டேபிள் ஸ்பூன்

ஷாம்பு

பயன்படுத்தும் முறை-

ஷாம்புவுடன் சாதாரண தண்ணீரை பயன்படுத்துவதற்கு பதிலாக தேங்காய் தண்ணீரை கலந்து பயன்படுத்தலாம்.

உங்கள் தலைமுடியை ஈரமாக்கிய பின் இந்த ஷாம்புவை கொண்டு உங்கள் முடியை நன்கு மசாஜ் செய்து சுத்தம் செய்யவும்.

இறுதியாக தண்ணீரில் முடியை அலசவும்.

முடியை அலச பயன்படுத்தலாம்

தலைக்கு குளித்த பிறகு, தலைமுடியின் பிரகாசம் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தேங்காய் தண்ணீரை கொண்டு முடியை அலசலாம்.

தேவையான பொருட்கள்-

தேங்காய் தண்ணீர்

பயன்படுத்தும் முறை

முதலில், எப்போதும் போல ஷாம்பூவே கொண்டு தலை முடியை அலசவும்.

இப்போது தேங்காய் தண்ணீரை தலையில் ஊற்றவும்.

தேங்காய் தண்ணீரை நேரடியாக பயன்படுத்தலாம். இதற்கு தனி மணம் இல்லாததால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

இதற்கு பிறகு தலைமுடியை இயற்கையாக உலர வைக்கலாம்.

தேங்காய் தண்ணீர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

இந்த ஆறு மாஸ்க் தலை முடியை நீண்ட நேரத்திற்கு நீரேற்றமாக வைத்துக் கொள்ளும். இது வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

தேங்காய் தண்ணீர் - 6-7 டீஸ்பூன்

தேன் - 4 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் தேங்காய் தண்ணீரில் தேன் கலந்து கொள்ளவும். இது திக் ஆக இருக்க வேண்டும்.

இப்போது இந்த கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியிலும் தடவவும்.

இது உங்கள் உச்சந்தலையில் ஊடுருவும் வகையில் ஒரு சூடான துண்டை கொண்டு தலை முடியை மூடவும்.

30 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலசலாம்.

வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் மாஸ்கை பயன்படுத்தலாம்.

மேற்கூறிய முறைகளில் தேங்காய் தண்ணீரை தலைமுடிக்கு பயன்படுத்தி அதன் நன்மைகளை பெற்றிடுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்