‘அழகிய தமிழ் மகள் இவள்’ அழகு என்ற அர்த்தத்தைக் கொண்ட பெயர்கள்! உங்கள் லிட்டில் பிரின்சஸ்களுக்காக இதோ!
அழகு என்ற அர்தத்ததைக் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம். இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
அழகு என்ற அர்தத்தைக் கொண்ட சமஸ்கிருதப் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்த பெயர்களை உங்கள் வீட்டு தேவதைகளுக்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். சமஸ்கிருதத்தில் அழகான மற்றும் நேர்த்தியான, எழிலுடைய என்ற அர்தத்தைக் கொண்ட பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து உங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்ந்தெடுக்கலாம். இப்போதெல்லாம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மார்டன் பெயர்களைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் இவை மார்டன் பெயர்கள் மட்டுமல்ல இவை பாரம்பரிய வேர்களில் இருந்து வருபவையாகும். எனவே இன்றைய இளவரசிகளுக்கு பொருந்தக் கூடிய பெயர்களும் ஆகும்.
லாவண்யா
லாவண்யா என்றால் வசீகரிக்கும் அழகுடைய பெண் குழந்தை என்று பொருள். இது கவிமயமான பெயராகும். இது மிகவும் நேர்த்தியான மற்றும் ஸ்டைலிஷான பெயராகும்.
சார்வி
சார்வி என்றால் அழகான மற்றும் பேரழகு கொண்ட என்ற அர்த்தம் தரக்கூடியது. இது தனித்தன்மையான பெயராகும். இது எண்ணற்ற நேர்மறை எண்ணங்கள் கொண்ட பெயராகும்.
சமைரா
சமைரா என்றால் அழகை பிரதிபலிக்கக் கூடிய நபர் என்று பொருள். இதை மார்டன் குடும்பத்தினரின் டிரண்டுக்காக தேர்ந்தெடுக்கும் பெயராக உள்ளது.
தாரா
தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். உங்கள் குழந்தை பிற்காலத்தில் ஒரு நட்சத்திரத்தைப் போல் மிளிர்வாள் என்பதைக் குறிக்கிறது. நட்சத்திரங்களின் அழகைக் கொண்டவள் என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.
ஆத்யா
ஆத்யா என்றால் துவக்கம் மற்றும் முதல் அழகு என்று பொருள். இது உங்கள் பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயராகும். அவர்கள்தான் உங்களின் முதல் மகிழ்ச்சி என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.
சான்வி
சான்வி என்றால் அது அழகிய லட்சுமி தேவியின் பெயராகக் கருதப்படுகிறது. இது ஆன்மீகம் மற்றும் நவீனம் என இரண்டின் கலவையாக உள்ள பெயராகும்.
ஈஷா
ஈஷா என்றால் தூய்மையான அழகு அல்லது பரிசுத்தமான அழகு என்று பொருள். இது சிறிய பெயர். ஆனால் நேர்த்தியான மற்றும் சமகால பெயராகவும். எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பெயராகவும் உள்ளது.
அன்விகா
அன்விகா என்றால் சக்திவாய்ந்த மற்றும் அழகிய என்று பொருள். இதுவும் நவீன தேர்வாகும். இதற்கு வலுவான அர்த்தமுள்ள பெயர் என்பதால், உங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளுக்குப் பொருந்தக்கூடியது.
அமேயா
அமேயா என்றால், எல்லையற்ற அழகு என்று பொருள். இது தனித்தன்மை கொண்ட பெயர். இது உங்கள் குட்டி தேவதைக்கு ஸ்டைலிஷாக இருக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்