Banana Stem Soup : சிறுநீரகத்துக்கு சிறந்தது – வாழைத்தண்டு சூப் இப்படி செய்து பருகுங்கள்!
Banana Stem Soup : சிறுநீரக கற்களை காலியாக்கும் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வாழைத்தண்டு சூப் செய்ய தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – 1 துண்டு
சின்ன வெங்காயம் – கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
இஞ்சி – ஒரு இன்ச்
பூண்டு – 5 பல்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
சீரகத்தூள் – சிறிதளவு
மிளகுத்தூள் – சிறிதளவு
கார்ன் பொடி – 1 ஸ்பூன் (தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்)
செய்முறை
முதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
(வாழைத்தண்டின் தோலை நீக்கிவிட்டு, வட்டவட்டமாக வெட்டி, இடையில் உள்ள நாரை நீக்கிவிடவேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக்கி, தயிர் அல்லது மோர் கலந்த நீரில் அலச வேண்டும். இதுதான் வாழைத்தண்டை சுத்தம் செய்யும் விதம். அப்போதுதான் தண்டில் உள்ள நார் முற்றிலும் நீக்கப்பட்டு, மோர் தண்ணீரில் சேர்க்கும்போது தண்டு கறுப்பாகாமல் இருக்கும்)
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நன்றாக உருகியதும், அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது அல்லது பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் தண்டு சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். தாராளமாக தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
வெந்தததில் பாதியை எடுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். மீதி சூப் கொதிக்கொண்டு இருக்க வேண்டும்.
அரைத்த விழுதையும் கொதிக்கும் சூப்பில் சேர்க்க வேண்டும். பின்னர் தண்ணீரைல் கரைத்த கார்ன் பொடி சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், கைப்பிடியளவு கொத்தமல்லித்தழை அனைத்தையும் சேர்த்து மூடிவைக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து திறந்தால் மணமணக்கும் வாழைத்தண்டு சூப் குடிக்கத்தயாராக இருக்கும்.
வாழைத்தண்டு சிறுநீரகத்துக்கு நல்லது. சிறுநீரக கற்களுக்கு அருமருந்தாக வாழைத்தண்டு பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்