Attukal Soup: எலும்பை வலுப்படுத்தும் ஆட்டுக்கால் சூப்.. பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ட்ரை பண்ணுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Attukal Soup: எலும்பை வலுப்படுத்தும் ஆட்டுக்கால் சூப்.. பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ட்ரை பண்ணுங்க!

Attukal Soup: எலும்பை வலுப்படுத்தும் ஆட்டுக்கால் சூப்.. பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ட்ரை பண்ணுங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 26, 2023 07:10 AM IST

ருசியான ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம் வாங்க.

ஆட்டுக்கால் சூப்
ஆட்டுக்கால் சூப்

தேவையான பொருட்கள்

மிளகு

சீரகம்

இஞ்சி

பூண்டு

பச்சை மிளகாய்

சின்ன வெங்காயம்

மஞ்சள்

தக்காளி

உப்பு

மல்லித்தழை

பாசிப்பருப்பு

செய்முறை

ஆட்டுக்காலை நன்றாக வாட்டி மேல் பகுதியில் தோலை சுத்தம் செய்து நன்றாக கழுவி பின் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 2ஸ்பூன் பாசிப்பருப்பை கழுவி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 4 ஆட்டுக்கால் அளவு எடுத்து கொண்டால் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு இன்ச் இஞ்சி, ஒரு கைபிடி பூண்டு, இரண்டு கைபிடி சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதில் ஒரு விராலி மஞ்சளை சேர்த்து அரைக்க வேண்டும்.  இப்போது ஒரு குக்கரில் 4 ஆட்டுக்காலை சேர்த்து 2 லிட்டர் வரை தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கொள்ள வேண்டும் ஒரு பழுத்த தக்காளியையும் நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். 

இரண்டு பச்சை மிளகாயை சீறி சேர்க்க வேண்டும். சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பை சேர்த்து குக்கரை மூடி வேக விட வேண்டும். 10 விசில் வரை வந்த பிறகு குக்கரை இறக்கி வைத்து விட வேண்டும். இப்போது ஊற வைத்த பாசிப்பறுப்பை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். 

பின் குக்கரை திறந்து ஆட்டுக்கால் வெந்து இருப்பதை பார்த்து அதில் அரைத்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பாசிப்பருப்பின் பச்சை வாடை போன பிறகு ஒரு கைபிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலையை சேர்த்து இறக்கி விட வேண்டும். 

சூப்பை பரிமாறும் போது ஒரு கப்பில் ஊற்றில் மேலாக கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நல்லது. எலும்புகளை உறுதிப்படுத்த உதவும்.

குறிப்பு

இந்த சூப்பிற்கு அம்மியில் அரைத்து மசாலா சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் . வாய்ப்பு இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்து கொள்ளலாம். மிக்ஸியில் அரைக்கும் போது மஞ்சள் கிழங்கிற்கு பதிலாக தூள் சேர்த்து கொள்ள வேண்டும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.