Ash gourd Juice: சர்க்கரை நோயாளிகள் வெண் பூசணி ஜூஸ் குடிக்கலாமா? - தெளிவு தரும் டாக்டர்!
வெண் பூசணி ஜூஸின் அபரிவித பயன்களை இங்கு பார்க்கலாம்.
வெண் பூசணிக்காயில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து தான் இந்த காயின் முக்கிய அம்சம். மலச்சிக்கல் தீர, சிறுநீர் எந்த வித கஷ்டமும் இல்லாமல் இயல்பாகச் செல்ல, ஜீரணம் ஒழுங்காக நடப்பதற்கு என எக்கச்சக்க பயன்களை இந்த ஜூஸ் நமக்குத்தருகிறது.
வெண் பூசணிக்காயில் 90% நீர் சத்துதான். இதில் 3 கிராம் அளவிற்கு புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும் பி மற்றும் சி வைட்டமின்கள் இருக்கின்றன. ஜிங்க் சத்தும் அதிகமாக இருக்கிறது.
எடை குறைப்பில் ஈடுபடுவோர் இந்த வெண்பூசணி ஜூஸை குடிக்கலாம். இது குடித்தவுடன் நமக்கு பெரிதாக பசி எடுக்காது. திருப்தியாக ஒரு உணவு சாப்பிட்ட உணர்வு நமக்கு கிடைக்கும்.
விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி இந்த வெண்பூசணி குடிப்பதால்,அல்சரும் அல்சர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் குணமாவதாக தெரியவந்திருக்கிறது
சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸை எடுத்துக் கொள்ள வேண்டாம். காரணம் அவர்கள் எடுத்துக் கொண்டால் என்ன விதமான பயன்கள் கிடைக்கும், பாதகங்கள் விளையுமா உள்ளிட்டவற்றுக்கு தெளிவான தகவல்கள் இன்னும் வரவில்லை. இந்த வெண்பூசணி ஜூஸூடன் மிளகு, உப்பு, தேன் என எதை வேண்டுமென்றாலும் சேர்த்து பருகலாம். காலையில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்த ஒரு மணி நேரத்தில் இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது நலம்.
நன்றி: மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர் சுதாகர்
டாபிக்ஸ்