Tasty Recipe: ஆஞ்சநேயர் கோயிலில் மட்டும் கிடைக்கும் மிளகுவடை செய்முறை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Recipe: ஆஞ்சநேயர் கோயிலில் மட்டும் கிடைக்கும் மிளகுவடை செய்முறை!

Tasty Recipe: ஆஞ்சநேயர் கோயிலில் மட்டும் கிடைக்கும் மிளகுவடை செய்முறை!

I Jayachandran HT Tamil
Apr 07, 2023 10:39 PM IST

ஆஞ்சநேயர் கோயிலில் மட்டும் கிடைக்கும் மிளகுவடை செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

ஆஞ்சநேயர் கோயிலில் மட்டும் கிடைக்கும் மிளகுவடை
ஆஞ்சநேயர் கோயிலில் மட்டும் கிடைக்கும் மிளகுவடை

அப்படிப்பட்ட மிளகு வடையை வீட்டில் எப்படி செய்வது என்பது பற்றி இனி பார்க்கலாம்.

ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை செய்யத் தேவையான பொருட்கள் –

உளுந்து – 200 கிராம்

சீரகம் – 2 ஸ்பூன்

மிளகு – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை செய்முறை –

மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

உளுந்தை நன்கு நீரில் கழுவி 20 முதல் 25 நிமிடம் மட்டும் ஊற வைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்த உளுந்தை தண்ணீர் சேர்க்காமல், வடைக்கு மாவு அரைப்பதை விட சற்று நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் உடைத்த மிளகு மற்றும் சீரகத்தை, உப்பு சேர்த்து பிசையவும்.

கடாயில் எண்ணையை நன்கு காய்ந்த பிறகு, எண்ணை தடவிய வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் மாவை தட்டையாக தட்டி நடுவில் சற்று துளையிட்டு எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான அனுமார் வடை தயார்.

அரைத்து வைத்துள்ள மாவை அதிக நேரம் வைத்து விட்டால் அதன் நிறம் மாறி விடும். சுவை சற்று கசப்பாக இருப்பது போல தோன்றும். அதனால் மாவை அரைத்தவுடன் வடையை சுட்டு எடுக்கவும்.

இந்த வடை பல நாட்கள் ஆனாலும் கெடாது என்பது இதன் சிறப்பம்சம்

அதில் உள்ள ஓட்டை வழியாக நூலின் உழைத்து மாலையாக்கி ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் சாற்றினால் மிகப்பெரிய நன்மை உண்டாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.