Raw Banana Cheese Balls: டேஸ்டில் அசத்தும் வாழைக்காய் சீஸ் பால்
வாழைக்காயில் எப்போதும் ஒரே மாதிரி பொரியல் அல்லது டோஸ்ட் செய்து கொடுப்பதற்கு பதிலாக இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.
வாழைக்காயில் எப்போதும் ஒரே மாதிரி பொரியல் அல்லது டோஸ்ட் செய்து கொடுப்பதற்கு பதிலாக இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் . அடிக்கடி செய்து தர கேட்பார்கள். வாழைக்காயில் செய்தது என்று சொன்னால் நம்பவே மாட்டர்கள் வாங்க எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய்
வெங்காயம்
மிளகு தூள்
சீரக தூள்
சோம்பு துள்
கரம் மசாலா
சீஸ்
ஆரிகனோ
கஸ்தூரி மேத்தி
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு
கான் பிளார்
எண்ணெய்
பிரட் க்ரம்ஸ்
பூண்டு
செய்முறை
வாழைக்காயை நன்றாக சுத்தம் செய்து குட்டி குட்டியாக நறுக்க வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் வெந்த வாழைக்கையை தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ள வேண்டும் அதில் ஒரு ஸ்பூன் மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூளை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் கால் ஸ்பூன் பெருங்காயத்தூளை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் 4 பூண்டு மற்றும் ஒரு பல்லாரி வெங்காயத்தை சேர்த்து பேஸ்டாக அரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் ஆரிகனோ மற்றும் கஸ்தூரி மேத்தியை சேர்த்து கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பை சேர்த்து கெட்டியாக மாவு பதம் வரும் அளவிற்கு பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் கான் பிளார் மாவை எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, கால் ஸ்பூன் பெப்பர் பவுடரை கலந்து எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல் பிரட்டை லேசாக டோஸ்ட் செய்து அதை மிக்ஸியில் அடித்து பிரட் கிரம்ஸ் ரெடி செய்து கொள்ள வேண்டும்.
இப்போது வாழைக்காய் மாவை கையில் தட்டி அதில் குழி வைத்து குட்டியாக நறுக்கிய சீஸ்ஸை உள்ளே வைத்து மீண்டும் அதை உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ள வேண்டும். இப்படி அனைத்து சீஸ் உருண்டையையும் உருட்டிய பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும்.
இப்போது சீஸ் பாலை கான்பிளார் மாவில் தோய்த்து எடுத்து கொள்ள வேண்டும் அதை பிரெட்கிரம்ஸில் சேர்த்து பிரட்டி எடுத்து பின்னர் சூடான எண்ணெய்யில் சேர்க்க வேண்டும். மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். அது பொன்னிறமாக மாறி வரும்போது சீஸ் பாலை எடுத்து விட வேண்டும். இதோடு டெமேட்டோ சாஸ் வைத்து பரிமாறினால் ருசி அட்டகாசமாக இருக்கும். இது மாலை நேரம் செய்து கொடுத்தால் குழந்தைகள் குஷியாகி விடுவார்கள்.
இதில் சீஸ் பிடிக்காதவர்கள் வெறும் வாழைக்காயுடன் சேர்த்த பொருட்களை மட்டும் வைத்து உருண்டையாக பிடித்து செய்து பார்க்கலாம். அதுவும் ருசி அருமையாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்