சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்!
ஆரஞ்சு, எலுமிச்சை, கினோவ், சாத்துக்குடி போன்ற சுவையான சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகள் நமது அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஆரோக்கிய உணவுகளாகும். பழங்களிலேயே மிக அதிக சத்து நிறைந்த, உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியது என்றால் சிட்ரஸ் பழங்களை சொல்லலாம். நம் அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொண்டால் பல்வேறு நோய் தொற்று அபாயத்தை குறைக்க முடியும்.
தோல் பராமரிப்புக்காக சிட்ரஸ் பழத்தோலை ஒருவர் தவறாமல் பயன்படுத்தி வந்தால் விரைவில் முகம் முதுமை அடைவதை தடுக்கலாம். கரும்புள்ளிகள், நிறமிகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பரு உள்ளிட்ட பல தோல் பிரச்சனைகளையும் தீர்க்க இந்த பழங்கள் உதவுகிறது. சிட்ரஸ் பழத்தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது.
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கினோவ் போன்ற சுவையான சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்த நமது உடலை பாதுகாக்கிறது. மிருதுவான, பளபளப்பான சருமத்தை நீங்கள் விரும்பினால் தினமும் சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை பளபளபாக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்
- ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை தடுக்கிறது. முகத்தில் இருக்கும் தேவையற்ற டெட் செல்களை அகற்றி, முகம் சுருக்கம் அடையாமல் அழகிய பொலிவை ஆரஞ்சு பழம் கொடுக்கும். ஆரஞ்சு பழத்தின் தோல்களை உலர வைத்து அரைத்து தேனுடன் கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
- எலுமிச்சை
எலுமிச்சை பழத்தோலில் நீங்களே முக பொலிவிற்கான ஃ பேஸ் பேக்கை செய்யலாம்.எலுமிச்சை தோலை 2-3 நாட்களுக்கு சூரிய ஒளியில் உலர்த்தி, உலர்ந்த பொடியாக நறுக்கவும். இரண்டு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 3-4 சொட்டு ரோஸ் வாட்டருடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை தோல் பொடியை கலக்கவும். அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, கழுவவும். கரு வளையம் தேவையற்ற செல்களை இது நீக்கும்.
- கினோவ் பழம்
ஆரஞ்சு பழம் போலவே இருக்கும் இந்த பழம் சிட்ரஸ் பழத்தின் ராஜா எனக் கூறப்படும். இந்த பழத்தை உட்கொண்டாலே அதிக நன்மை பெறலாம்
- சாத்துக்குடி
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போலவே சாத்துக்குடி தோலிலும் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. எனவே இந்த பழமும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.