6 மாதங்களாக குறைந்த ஏர்டெல் - அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்!
ஏர்டெல் - அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பேக் வேலிடிட்டி ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான அமேசான் பிரைம் சந்தா ப்ளான்களை திருத்தியுள்ளது. ஏர்டெல் - அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பேக் வேலிடிட்டி முந்தைய 12 மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.399 இல் தொடங்குகிறது, ஆனால் எஃபக்டிவ் மாற்றம் ரூ 499 திட்டத்தில் இருந்து தொடங்குகிறது.
அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் 100 SMS உடன் அமேசான் பிரைம் (Amazon Prime) நன்மைகளுடன் ரூ. 999, ரூ 1,199 மற்றும் ரூ. 1,599 போன்ற பிற ஏர்டெல் (Airtel )போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உள்ளன. முன்னதாக, இந்த நான்கு போஸ்ட்பெய்ட் திட்டங்களும் ஒரு வருட அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் வந்தன. ஏர்டெல் நிறுவனம் அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் திடீரென திட்டங்களை திருத்தியுள்ளது.
ஏர்டெல் மற்றும் அமேசான் பிரைம் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் இணைந்தவர்களுக்கு மாறாது. புதுப்பிக்கப்பட்ட செல்லுபடியாகும் காலம், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்குகிறது, அதாவது இந்தத் தேதிக்குப் பிறகு இணைந்த சந்தாதாரர்கள் ஆறு மாதங்களுக்கு மட்டுமே அமேசான் பிரைம் (Amazon Prime) மெம்பர்ஷிப்பைப் பெறுவார்கள்.
அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணமும் உயர்ந்துள்ளது. மாதாந்திரம் முதல் ஆண்டு வரை அனைத்து பேக்குகளும் கிட்டத்தட்ட 50 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளன. முன்னதாக, ஆண்டு உறுப்பினர் கட்டணம் ரூ 999 ஆக இருந்தது, இது தற்போது ரூ. 1,499 ஆக உயர்ந்துள்ளது.