Self Improvement: உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கச் செய்யும் 30 விஷயங்கள்
உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கச் செய்யும் 30 விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மனதையும் உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தது. அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக்கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக அமையும்.
01. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
02. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
03. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
04. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
05. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
06. நிறைய புத்தகங்கள் படியுங்கள்.
07. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
08. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
09. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அது உங்கள் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
15. அடுத்தவரைப் பார்த்துப் பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்குத் தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தைச் சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்னைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்னைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதுக்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதுக்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்தச் சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்
டாபிக்ஸ்