Tender Coconut: கொளுத்தும் வெயில்.. உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் சாப்பிடலாமே!
Tender Coconut: பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருக்கும் இளநீரைக் குடிப்பது மிக நல்லது என்கிறது மருத்துவம்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே பல இடங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் சருமத்திலும் உடலிலும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கோடைக் காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க நீரேற்றமாகவும் வைத்திருக்க, நாம் பல்வேறு குளிர் பானங்களை வாங்கிப் பருகி வருகிறோம் .
வெப்பத்தைத் தணிப்பது போல் முதலில் இருந்தாலும் நமது ஆரோக்கியத்தையும் இவை தனித்து விடுகிறது. பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களால் நம் உடலுக்கும், நமக்கும் எந்த பயனும் இல்லை. காரணம் அதில் கலந்துள்ள இரசாயனங்கள். பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் நார்ச்சத்து கிடையாது. ஆனால், ஒரு டம்ளர் இளநீரில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.
ஆகையால் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீரை பருகுவதே சிறந்தது. உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர். பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருக்கும் இளநீரைக் குடிப்பது மிக நல்லது என்கிறது மருத்துவம்.
இளநீரால் கிடைக்கும் 10 நன்மைகள்:
- உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்
- உடல் எடை குறையும்
- முகப்பருக்கள் வருவதை தடுக்கும்
- உடலில் நீர்வறட்சி ஏற்படாது
- சரும பாதிப்பு ஏற்படாது
- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்
- சிறுநீரகத்தில் கற்கள் வளர்வதை தடுக்கிறது
- செரிமானப் பிரச்னை ஏற்படாது
- கீல்வாதம் பிரச்னையில் இருந்து விடுபடலாம்
இயற்கை அள்ளி தந்த கோடையின் கொடை இளநீர்.பொதுவாக இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரட்சனைகளையும் சரி செய்யும் குணம் உடையவை. உடலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு இளநீர் பருகுவோம்.உடலை நல்ல முறையில் பராமரிப்போம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9