Apple Event 2023 Highlights: அதகள ஆப்ஷன்கள்; அப்டேட் அல்ட்ரா வாட்ச்.. கலர் கலராக ஐ போன் சீரிஸ்கள்! - முழு விபரம்!
ஐ போன் 15 6.1 இன்ச் ஸ்கீரின் ஸ்பேசிலும், ஐ போன் 15 ப்ளஸ் 6.7 இன்ச் ஸ்கீரின் ஸ்பேசிலும் களமிறக்கப்பட்டு இருக்கிறது.
நேற்றைய தினம் (12—09 –2023) ஆப்பிள் நிறுவனத்தின் வுண்டர் லஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐ போன் 15, ஐ போன் 15 ப்ளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
கூடவே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 -ம், வாட்ச் அல்ட்ரா 2 வும் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் வாட்ச் சீரிஸில் சில முன்னேற்றேங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
இதில் இடம் பெற்று இருக்கும் S9 சிப்பானது 60 சதவீதம் வேகமானதாம். இதனுடன் 30 சதவீதம் வேகம் கொண்ட ஜிபியூ -ம் இணைக்கப்பட்டு இருக்கிறதாம்.
உடல்நலம் குறித்த தரவுகளை தெரிந்து கொள்ள புதிய ஆப்ஷன்கள் ஆப்பிளின் ஸ்ரீ (siri ) டிஜிட்டல் அஸிஸ்டெண்ட் உடன் சேர்த்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல கடந்த வருடம் ஆப்பிள் அறிமுகப்படுத்திய வாட்ச் அல்ட்ராவையும் அப்டேட் செய்திருக்கிறது. இந்த அப்டேட் நமது உடற்பயிற்சியின் போது தரவுகளை சேகரிக்க உதவுகிறது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் ஐ போன் 15 சீரிஸ்களில் Super Retina XDR display மற்றும் A16 Bionic சிப் இடம்பெற்று இருக்கிறது.
இரண்டு விதமான சைஸ்களில் களமிறக்கப்பட்டு இருக்கும் இந்த ஐ போன்கள், விளிம்பு டிசைன் மாற்றத்துடன், பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.
கேமரா வசதி எப்படி?
கேமரா வை பொருத்தவரை, 48 மெகா பிக்ஸல்களுடன் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 4K குவாலிட்டியில் வீடியோக்களை ரெக்கார்டு செய்ய முடியும். கூடவே ஆட்டோ போர்ட் ட்ரெயிட் மோடும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
ஐ போன் 15 ப்ரோ சீரிஸ்களை பொருத்தவரை போன் டைட்டானியம் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கேம் விளையாடுபவர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த போனானது ஈசியாக ரிப்பேர் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட லென்சுகளை உள்ளடக்கிய இந்த போனில் A17 ப்ரோ சிப் பொருத்தப்பட்டு இருக்கிறது. ப்ரோ லெவல் கேமரா சிஸ்டமும் இதில் அடங்கி இருக்கிறது.
சி டைப் யூ.எஸ்.பி கனெக்டரை பொருத்தும் வகையில் ஆப்பிள் ஐ போன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வாட்ச்சீரிஸ்களை பொருத்தவரை அதன் ஆரம்பவிலை 300 டாலர்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ ரூ 33081.30 லிருந்து ஆரம்பம் ஆகிறது.
ஆப்பிள் 15 ப்ரோ போனின் விலையானது 999 டாலர்களில் இருந்து விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 82827.50 ரூபாய் ஆகும்.
ஐ போன் மேக்ஸ் ப்ரோ போனானது 1199 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதன் இந்திய ரூபாய் மதிப்பு 1,65737.90 ரூபாயாகும்.
டாபிக்ஸ்