உங்கள் கழிப்பறையை விட அசுத்தமானது உங்களது வாகனம்! எப்படி தெரியுமா?
மலத்தில் காணப்படும் பாக்டீரியாக்களின் தடயங்கள் லாரி மற்றும் கார்களின் ட்ரைவர் சீட்களில் அதிகமாக இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஈரப்பதமான சூழ்நிலையே இதுபோன்ற பாக்டீரியாக்கள் செழிப்பாக வளர்வதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
புதிதாக வாங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன வண்டி ஒன்றில் பாக்டீரியாக்களின் தடயங்கள் ட்ரைவரின் சீட்டுகளில் மட்டுமல்லாமல், கியர் மாற்றும் லீவர், பின்னால் இருக்கும் இருக்கைகள், டாஷ்போர்டு என பல பகுதிகளில் காணப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைகிறது என்று சொல்வதில் பெரிய ஆச்சரியங்கள் ஏதும் இல்லை. ஆனால் இவற்றை விட உங்கள் வண்டிகளின் ஸ்டீரிங் வீல் சுத்தமாக இருக்கிறது என்று கூறுவது ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.
சிறிய மாதிரி அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், உங்களது வாகனங்களை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவதன் அவசியத்தை காட்டுகிறது. நமது வீட்டின் கழிப்பறையை நன்கு சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிப்பது போன்ற கவனிப்பை, வாகனங்களுக்கு செய்யாமல் தவிர்கிறோம். துசு,க்களை நீக்கி வெற்றிடமாக வைத்துக்கொள்ளும் நாம், அந்த இடத்திலேயே தங்கிவிடும் பாக்டீரியாக்கள் நிறைந்த அழுக்குகளை சுத்தப்படுத்துவது கிடையாது. குறிப்பாக பழைய வாகனங்களில் இந்த அழுக்கானது அதிகமாக படிந்துவிடும்.
வீட்டில் இருப்பது போன்ற தட்பவெப்பநிலை கார்களுக்கு கிடையாது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலில் இருந்து வெளியேறும் ஈரப்பதம். இது பாக்டீரியாக்களுக்கு குஷியை உண்டாக்கி நன்கு வளர்வதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறது என்று ஆஸ்தான் பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு மூத்த பேராசியர் டாக்டர் ஜொனத்தன் காக்ஸ் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல், அவ்வப்போது வாகனங்களின் உட்புறங்களை தூய்மைப்படுத்துவது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் எப்போதும் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.